பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. #UnionBudget
கடன்கள் முழுவதும் தள்ளுபடியா? நாளைய பட்ஜெட்டை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பதிவு: ஜனவரி 31, 2018 17:26
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நாளை 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிறு குறு தொழில்களுக்கும் சலுகைகள் அளிக்க அருண் ஜெட்லி முன் வந்துள்ளார். அதுபோல பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அறிவிப்புகளும் வர உள்ளன. இவை வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் வகையில் இருக்கும். #TamilNews