கர்நாடகா தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் - டெலிவரி பாயுடன் பைக்கில் பயணம் செய்த ராகுல் காந்தி

Published On 2023-05-07 22:33 IST   |   Update On 2023-05-07 22:33:00 IST
  • பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா என பலரும் பிரசாரம் செய்தனர்.
  • நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மந்திரிகள் என பலரும் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதேபோல், நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திடீரென டெலிவரி பாய் ஒருவரின் பைக்கில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

அதன்பின் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News