லைஃப்ஸ்டைல்
காதலர் தினத்தின் தவறான கண்ணோட்டம்

காதலர் தினத்தின் தவறான கண்ணோட்டம்

Published On 2020-02-14 03:08 GMT   |   Update On 2020-02-14 03:08 GMT
மேலைநாட்டுக் கலாச்சாரங்களின் பாதிப்பில் மிக அதிகமாக இளைஞர்கள் வீழ்வது காதலர் தினம்! அன்னையர்தினம், தந்தையர் தினம் என்பதெல்லாம், அன்றாடம் பெற்றோருடன் கூடியிருப்போருக்குப் போலியான கொண்டாட்டங்கள்தான்.
ஒருவரின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியாமல் தடுமாறுபவரின் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோ அல்லது தவறான எண்ணமோ உள்ளது என்பதை உணரலாம். கண்களைப் பார்த்து பேசுபவர்கள் தவறான எண்ணமே இல்லாதவர்கள் என்பது இதன் பொருளல்ல.

செல்லக்கிளிக்குஊரே அதிசயிக்கும் வகையில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. தந்தை இல்லாத குறை தெரியக்கூடாது என்று அந்த தாய் எடுத்துக்கொண்ட முயற்சி ஒவ்வொரு சிறிய விசயத்திலும் பிரதிபலித்தது. கணவன் இருந்தவரை குடும்பம், ஒரே பெண் குழந்தையின் படிப்பு, மனைவியின் தேவைகள் என அனைத்தையும் தன் பொறுப்பிலேயே பார்த்துப் பார்த்து செய்த மனிதர் ஒரு நாள் திடீரென்று மார்வலியில் மயங்கிச் சரிந்தவர், மீண்டும் எழுந்து வரவேயில்லை. ஒரு நொடியில் வாழ்க்கை தன்னை இப்படிப் புரட்டிப்போடும் என்று கனவிலும் நினைக்கவில்லை அவள்.

பல சிரமங்களுக்கு இடையே, மகளின் திருமணம் சிறப்பாக முடிந்தும் கடமையை முடித்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாத வகையில்பெரும் பிரச்சினை ஒன்று விசுவரூபம் எடுத்தது. மேலைநாட்டுக் கலாச்சாரங்களின் பாதிப்பில் மிக அதிகமாக இளைஞர்கள் வீழ்வது காதலர் தினம்! அன்னையர்தினம், தந்தையர் தினம் என்பதெல்லாம், அன்றாடம் பெற்றோருடன் கூடியிருப்போருக்குப் போலியான கொண்டாட்டங்கள்தான்.

மேலை நாட்டைப் பொருத்தவரை, பெரும்பாலும் ஐந்தாவது வகுப்பு வரை அரசு செலவில்படிக்கும் வரைதான் குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும். அதன் பிறகு அந்தக் குழந்தைகளின் அவல நிலை, தானே சம்பாதித்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் பெற்றோரை விட்டு விலகுபவர் அதிகம் .வருடம் ஒருமுறை பெற்றோரை கேக்குடன் சென்று கொண்டாடி, நன்றி சொல்லி முடித்து விடுவார்கள்.

வேலண்டைன்சு தினம் என்கிற காதலர் தினம், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில், உறவினர்கள், சக மனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு தினமாக மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதாவது குழந்தைகள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தன்னால் ஆன பரிசுகளைக் கொடுத்து அன்பைத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் நம் நாட்டிலோ இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு காதலர்களுக்கானதினமாக மட்டுமே கொண்டாடுகிறார்கள். இந்தியா போன்று பாரம்பரியங்களால் இயங்கும் ஒரு நாட்டில் இப்படிப்பட்ட காதல் நீண்டு நிலைத்திருக்கும் திருமண உறவாக மலர்வதும் அரிதுதான். இங்கு திருமணம் என்பது நல்வாழ்வு, மகிழ்ச்சி,பாரம்பரியப் பெருமையைக் காத்தல் போன்று மனித உறவுகளின் மிக நெருக்கமான வடிவம்.

முரண்பாடுகளால் ஆன வாழ்வியல் மன அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறது. அவை சில நேரங்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாகப் பாதிப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை உதவியற்றவராக உணர ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சேர்ந்து இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.
செல்லக்கிளிக்கு உறவிலேயே நல்ல வரன் அமைந்தும் அவளால் மூன்று நாட்களுக்கு மேல் கணவன் வீட்டில் இருக்க முடியாமல் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள். கணவனின் முகத்தை ஏரெடுத்தும் பார்க்காமல்கூட வந்திருக்கிறாள் என்பது, சொல்லி அழ கணவனும் அருகில் இல்லாத அந்த தாய்க்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

செல்லக்கிளி ஊருக்கு வந்ததிலிருந்தே தன்னிடம் சரியாக முகம் கொடுத்தேப் பேசவில்லை என்பதை உணர்ந்திருந்தாள் அவள் தாய். கணினி பொறியியலாளராக அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவள், தந்தையின் திடீர் மரணத்தினால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தாள். அந்த நேரத்தில்தான் பணி நிமித்தமாக வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலையில், தாயை தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல் தவிர்க்க நினைத்தவளை, இடமாற்றம் அவளுக்கும் மன ஆறுதலை அளிக்கும் என்ற நம்பிக்கையில் கட்டாயப்படுத்தித்தான் ஒத்துக்கொள்ள வைத்திருந்தாள். ஒரு வருட பிராஜெக்ட் போகிறபோக்கில் முடிந்துவிடும், திரும்பியவுடன் மணமுடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தும், திரும்பி வந்ததிலிருந்து அவளிடம் பெரிய மாற்றங்கள் இருந்தும் எவ்வளவோ கேட்டும் அவள் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டாள். தாயும் திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து திருமண ஏற்பாடுகளும் செய்தது தவறாகிவிட்டதோ என்று அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். இதை விடக் கொடுமை வாய்மூடி மவுன விரதம் காக்கும் அவளுடைய அந்த மாற்றத்திற்கானகாரணம் எதுவுமே அவளிடமிருந்து பெற முடியவில்லை.

10 மாதம் சுமந்து பெற்று வளர்த்த மகளின் மனநிலையைக்கூட புரிந்துகொள்ள முடியாமல் இன்று திருமண மேடை வரை வந்தும் என்ன ஆனது என்று கூட புரிந்து கொள்ள முடியாத தன் நிலையை நினைத்து சுயபச்சாதாபம்தான் மேலிட்டது அவளுக்கு. உள்ளிருந்து உருக்குலைக்கும் புற்று நோயைப்போல வெளியில் தெரியாமலேயே கலாச்சார சீர்குலைவில் சிக்கித் தவிக்கும் இன்றைய இளைஞர்களை வழிநடத்தும் வல்லன்மையைப் பெறாத பெற்றோருக்கு இது போன்ற பேரதிர்ச்சிகளும் இயல்பான ஒன்றாகத்தானே இருக்க முடியும்?

தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான முடிவை எடுக்கும் அதிகாரம் குடும்பத் தலைவருக்கு இருந்த காலம் மாறி தற்போது அது வரலாறாக மாறி வருகிறது. விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவதில் பெரும்பான்மை யானவர்கள் அதை பாரம்பரியத்திற்கு எதிரானதாகக் கருதுகின்றனர்.

எவ்வளவோ முயன்றும் அன்பு மகள் மனம் திறக்கத் தயாராக இல்லாத நிலையில் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி செல்லக்கிளியை உளவியல் சோத னைக்கு உட்படுத்த வேண்டியதாகியது. தொடர்ந்த ஆலோசனை அமர்வுகளில் அந்தத் தாய், கனவிலும் நினைத்துப் பார்க்காத, நினைவில் அறிந்து கொண்ட செய்தி தலையில் இடி இறங்கியது போல இருந்தது.

தந்தையை இழந்த சோகத்தில் இருந்தவள், சரியாக சாப்பிடாமலும், உறக்கம் இல்லாமலும் உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய உடன் பணிபுரியும் சக தோழனுடன் மெல்ல மெல்ல நெருக்கம் அதிகமாகியிருக்கிறது. இந்த நிலையில் தந்தையைப் போலவே தன்னை மிகவும் நேசிக்கும் ஒருவனாக கற்பனை செய்து கொண்டவள் அவனுடன் மிகவும் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழவும் தொடங்கிவிட்டார்கள்.

செல்லக்கிளியின் இந்த சூழ்நிலையை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டான் அந்த கயவன். நல்ல நட்பின் அடிப்படையிலான புரிதல் இருவருக்கும் இருந்த வகையில் செல்லக்கிளி அவனை கண வனாகவே வரித்துக்கொண்டவள் தன் அம்மாவிடம் விசயத்தைச் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யக் காத் திருந்தாள்.

இந்த நேரத்தில்தான் இருவருக்கும் அவரவர் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். செல்லக்கிளி இருவர் வீட்டிலும் உண்மையை சொல்லிவிடலாம் என்று கூறிய தருணத்தில்தான் அவன் எவ்வளவு கோழையாக இருந்திருக்கிறான் என்பது புரிந்தது. சேர்ந்து வாழும்போது வீரனாகக் காட்டிக்கொண்டவன் அவனுடைய தந்தையாரின் ஒரே சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரவர் வீட்டில் பார்க்கும் வரனையே மணப்பதுதான் இருவருக்கும் நல்லது என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு ஆட்டத்தை அத்துடன் முடித்தும் விட்டிருக்கிறான்.

அனைத்தையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தவள், பெற்றவளிடம் அதை சொல்லவும் துணிவில்லாமல் குமைந்து போயிருக்கிறாள். அனைத்துமே கைமீறி சென்றுவிட்ட நிலையில் திருமணம் முடிந்தவுடனும், குற்ற உணர்ச்சியால் தன் திருமண வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். கட்டுப்பாடான இந்திய பாரம்பரிய வளர்ப்பு முறையில் வந்தவளுக்கு இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

வாழ்க்கையின் ஒவ்வொரு இலட்சியத்தை அடைவதற்கும் ஒவ்வொரு திருமணமும், ஒவ்வொரு விவாகரத்தும் செய்யலாம் என்ற நவநாகரீகக் குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதாவள் ஆயிற்றே?

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிக மான மக்கள் மனநல ஆலோச னைகள் தேவைப்படும் நிலையில் இருக் கிறார்கள் என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களில் 1000-க்கு 49 ஆகவும், நகர்ப்புற மக்களுக்கு 1000-க்கு 81 ஆகவும்உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், குடும்ப அமைப்புகளிலிருந்து தனி குடும்பங்களுக்கு மாற்றத்தை உருவாக்கியுள்ளதன் மூலம் பழைய பாரம் பரிய மற்றும் புதிய தனித்துவ மதிப்பு களுக்கு இடையிலான பதட்டங்களை அதிகரிக்கின்றன என்பதும், திருமணங்கள் என்பது இரண்டு நபர்களுக்கிடையில் அல்லாமல் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிகழ்கின்றனஎன்பதையும் உணர முடிகின்றது. இதிலிருந்து விலக வேண்டிய சூழல் நேரும்போது அது இத்தகைய பிரச்சினையை ஏற்படுத்துவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?

குழந்தைகளுடனான நேர்மறையான தொடர்புகளை அதிகரிக்கவும், அதீதக் கட்டுப்பாடுகளை நடைமுறையில் கொண்டுள்ள பெற்றோருக்கு அதை குறைக்கச் செய்யவும், சீரற்ற பெற்றோருக்குரிய நடைமுறைகளை சீராக்கவும், நடை முறைகளில் ஒருமித்த கருத்தை அதிகரிக்கவும், குழந்தைகளின் குறிப்பிட்ட உளவியல் சிக்கல்களை நிர்வகிக்கவும் பெற்றோர்கள் பயிற்சி பெறவேண்டிய தேவைகளையும் இந்த கலாச்சார மாற்றங்கள் உருவாக்கியுள்ளதை மறுக்கவியலாது.

செல்லக்கிளிகளின் எதிர்காலத்தை இனி காலம்தான் முடிவு செய்யவேண்டும்!
Tags:    

Similar News