லைஃப்ஸ்டைல்
காதல் உறவில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாத விஷயங்கள்

காதல் உறவில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாத விஷயங்கள்

Published On 2019-12-31 03:57 GMT   |   Update On 2019-12-31 03:57 GMT
காதல் உறவுகளில் நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாத முக்கிய சில விஷயங்கள் உள்ளன. அதுதொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
காதல் உறவுகளில் நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாத முக்கிய சில விஷயங்கள் உள்ளன. அதுதொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காதல் உறவின் தொடக்கத்தில் இருக்கும் ஜோடிகள், உடனே உத்தரவாதத்தை எதிர்பார்க்கக் கூடாது. எனினும், உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.

உணர்வுகள் ரீதியான பரிவு இருப்பது முக்கியது. கைகளை கோர்ப்பது, தோளோடு தோள் சேர்ப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் அவற்றுக்கு வலு சேர்க்கும்.

அந்த நாளில் நடக்கும் எந்த செயல்பாடாக இருந்தாலும், அதுகுறித்து துணையோடு பேசுங்கள். அப்போது, அந்த செயல்பாடுகளில் நீங்கள் உணரும் வேறுபாடுகளையும் வெளிப்படுத்திடுங்கள்.

காதல் உறவில் நேர்மையுடன் இருப்பது, இருவருக்குமான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். அதுதான் உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.

நீங்கள் எதுபோன்ற காதல் உறவை அமைத்துக் கொள்கிறீர்கள் என்பதில் நிச்சயம் தெளிவு இருக்க வேண்டும். தேவைக்காக பழகுவது, பயன்பாட்டை எதிர்பாத்து உறவில் இணைவது போன்றவற்றுக்கும், எதிர்கால வாழ்க்கை திட்டத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்திடுங்கள். காதல் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் அது பிரச்னையை உருவாக்கும்.

காதல் உறவில் ஈடுபடும் யாரும் புதிய விஷயங்களை எதிர்பார்ப்பது இல்லை. அதனால் எப்போதும் உங்களது மனதை வெளிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள். எனினும், உறவுகளில் ஏற்படும் புதிய உணர்வுகளை சற்று அனுபவிப்பது புத்துணர்ச்சியை தரும்.

காதல் உறவுகளில் அனுதாபங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை மறந்துவிட வேண்டும். அவை தான் காதலுக்கான அடித்தளமாகவும், உறவுக்கான உறுதித்தன்மையாக இருக்கின்றன.

காதல் ஜோடிகள் இருவருக்குமிடையில் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அது இருந்தால், உறவுக்கான அடுத்தக்கட்டத்தை காதலர்களை எடுத்துச் செல்லும்.

மேற்கூறிய எல்லாவற்றையும் விட, நம்பிக்கை ஒன்று தான் உறவுக்கான அடிப்படை. அதில் தான் உணர்வுகள், உறவுக்கான உறுதித்தன்மை, இயல்பு போன்றவை அடங்கியிருக்கின்றன. அதில் எப்போது சமரசம் இருக்கக்கூடாது. 
Tags:    

Similar News