லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை கட்டுப்படுத்த பெற்றோர் கையாளும் தந்திரங்கள்

குழந்தைகளை கட்டுப்படுத்த பெற்றோர் கையாளும் தந்திரங்கள்

Published On 2019-11-27 06:38 GMT   |   Update On 2019-11-27 06:38 GMT
குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தன் சொல்படி நடக்க வைக்க பெற்றோர் கையாளும் யுக்தி மற்றும் தந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் சில நேரங்களில் தனக்கு பிடித்ததை, தனக்கு தோன்றியதை அல்லது பெற்றோர் மொழி கேளாமல் சில விஷயங்களை செய்கையில், அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் அதிக பிரயத்தனம் செய்வதுண்டு. அப்படி குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தன் சொல்படி நடக்க வைக்க பெற்றோர் கையாளும் 5 யுக்தி மற்றும் தந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. குழந்தையின் விருப்பங்களை மாற்றி அமைப்பது; அதாவது குழந்தைக்கு பிடித்த நிறத்தை விடுத்து, உங்களுக்கு பிடித்த நிறத்தில் சட்டை எடுப்பது. நீங்கள் குழந்தையாய் இருந்த போது சாப்பிட்ட உணவுகளை, அணிந்த ஆடைகளை, பார்த்த இடங்களை குழந்தைக்கு அளிப்பது. குழந்தைக்கு அவை பிடித்திருக்கிறதா இல்லையா என கேட்டறியாமல் இவ்வாறு செய்து கொண்டே செல்வது தவறு.

2. குழந்தை ஏதேனும் வேலை செய்தால் அதை பாராட்டி பணம் அளிப்பது தவறு. இது குழந்தை வளர்ந்த பின் லஞ்சம் அளிப்பது, ஊழல் போன்ற பழக்கங்களை அவர்களுள் ஏற்படுத்தி விடலாம். அதனால் குழந்தைகள் வேலை செய்வதை பாராட்ட நினைத்தால், அவர்களை சுற்றுலா தலங்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று மகிழச் செய்யவும். இல்லையேல் அவர்களுக்கு பிடித்ததை பரிசளிக்கலாம்.

3. குழந்தைகளை ஏதேனும் செய்ய விரும்பினால், உடனே அவர்களை பயமுறுத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் சில பெற்றோர். குழந்தைகளின் சிறுவயது பயம், வளர்ந்த பின்னும் அவர்களை கோழையாக்கி விடும்.

4. உங்கள் குழந்தைகள் ஏதேனும் செய்ய நினைத்தால், அவற்றை பல காரணங்கள், பல விளக்கங்கள் சொல்லி தடுத்து அவர்களை உங்கள் விருப்பப்படி நடக்க செய்திடுவீர். இது மிக மோசமான செயல். குழந்தைகளுக்கு நீங்கள் உயிர் அளித்திருந்தாலும், அவர்களின் உணர்வுகளும் எண்ணங்களும் உங்களில் இருந்து வேறுபட்டவை என்பதை உணருங்கள். உங்கள் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிப்பதை தவிருங்கள்..

5. சினிமாக்களில் காண்பிப்பது போல், உணர்ச்சிப்பூர்வமாக குழந்தைகளை மிரட்டி, உங்கள் இஷ்டப்படி அவர்களை நடக்க வைப்பது பெரும் தவறு. குழந்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டுகையில், அவர்கள் தைரியத்தை இழந்து, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆகையால், பெற்றோர் இத்தகைய பழக்கம் கொண்டிருந்தால், அதைத் தவிர்த்து விடுவது நல்லது.
Tags:    

Similar News