லைஃப்ஸ்டைல்
வாழ்க்கையை விழுங்க காத்திருக்கும் புதை குழி

வாழ்க்கையை விழுங்க காத்திருக்கும் புதை குழி

Published On 2019-11-01 06:31 GMT   |   Update On 2019-11-01 06:31 GMT
சமூக வலைத்தளங்களையும், இணையதளங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மன கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணராமல் இருந்தால் அவர்களை சமூகமும், குடும்பமும் புறக்கணிக்கும் அவலம் உருவாகும்.
இணைய தளங்களில் பாலியல் சார்ந்த கிளர்ச்சியூட்டக்கூடிய விஷயங்கள் அடங்கிய பக்கங்களை பார்வையிடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆண்கள் அளவுக்கு பெண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு வருகிறது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் அப்படி பார்ப்பவர்களில் 65 சதவீதம் பேர் தங்களுடைய மனதளவிலும், குடும்ப வாழ்க்கையிலும் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். வீண் சந்தேகம், அவநம்பிக்கை, திருப்தியின்மை போன்ற பலவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இணைய இருப்பவர்கள் மண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, இணைந்தவர்கள் சந்தேக நோய், திருப்தியின்மையால் அவதிப்படுவது, திருமணத்துக்கு வெளியே புதிய உறவுகளை உருவாக்கி கொள்ள நினைப்பது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனுடைய பின்விளைவுகளை ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் செய்திகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு முகூர்த்த தேதி நெருங்கும் நேரத்தில் திருமணத்தை நிறுத்துதல், தவறான உறவுகளை ஏற்படுத்துதல், கணவன் - மனைவி பிரிந்து செல்வது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. திருமணமான 24 மணி நேரத்தில் புதுமண தம்பதியர் பிரிந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. முதலிரவு அன்று கணவன் கேட்ட கேள்வி மனைவியை விரக்திக்குள்ளாக்கி அன்றே பிரியும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை பார்ப்போம்!

கணவன் மனைவியிடம், ‘‘நான் ஒரு கேள்வி கேட்டால் தவறாக நினைக்க மாட்டாயே?’’ என்றிருக்கிறார். மனைவியும், ‘‘தயங்காமல் கேளுங்கள். எதுவும் நினைக்க மாட்டேன்” என்றிருக்கிறாள். அதுவரை தயங்கிக் கொண்டிருந்த கணவன், “நான் நான்கு நாட்களுக்கு முன்பு செக்ஸ் வீடியோ ஒன்று பார்த்தேன். அதில் இருந்த பெண் உன்னை மாதிரியே அழகாக இருந்தாள்’’ என்றிருக்கிறார். உடனே மனைவி, ‘‘அது நான் தான்’’ என்று கூற, கணவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘‘நீ சும்மா விளையாட்டுக்குத்தானே சொல்கிறாய்?’’ என்று கேட்க மனைவியோ, ‘‘என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லையா. அது நானே தான். இன்னுமா நீங்கள் நம்பவில்லை’’ என்று சொல்லி இருக்கிறாள். அதை கேட்டு கணவன் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார். மீண்டும் மீண்டும் அதுபற்றியே கேட்டு இரவு முழுக்க மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளார். அன்று அவர்களுக்கு முதலிரவு நடக்கவில்லை.

மறுநாள் அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாள். ‘செக்ஸ் வீடியோ பார்த்து விட்டு அதில் இருப்பவள் என்னை போல் இருப்பதாக சொல்கிறார். அதில் இருப்பவளுடன் என்னை ஒப்பிட்டும் பேசுகிறார். அப்படிப்பட்ட வீடியோ பார்ப்பதுதான் அவருடைய பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. இத்தகைய சுபாவமும் சந்தேக எண்ணமும் கொண்டிருப்பவருடன் என்னால் வாழ முடியாது’ என்று கூறிவிட்டாள். திருமணம் நடந்த 24 மணி நேரத்திற்குள் அவர்களுடைய இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

‘‘இணையதள செக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிப்பது குடும்பத்துக்குள் எந்த மாதிரியான பிரச்சினைகளை உருவாக்குகிறது’’ என்று திருமண ஜோடிகளிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:

இணையதளங்கள், சமூகவலைத்தளங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

70 சதவீதம் பேர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், 30 சதவீதம் பேர் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இணையதள காட்சிகள் உங்கள் பாலியல் உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

69 சதவீதம் பேர் தாம்பத்திய வாழ்க்கைக்கு சுவையூட்டி இருக்கிறது என்றிருக்கிறார்கள். 27 சதவீதம் பேர் அதனால் தங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள். 4 சதவீதம் பேர் எங்கள் வாழ்க்கையே அதோடு சீரழிந்துவிட்டது என்று வேதனையோடு சொல்லி இருக்கிறார்கள்.

‘சைபர் செக்ஸ்’ புதிய தலைமுறையை திசைமாறி செல்ல வைத்துவிடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

அது ஓரளவுக்கு உண்மைதான். அவர்கள் வாழ்க்கை திசை மாறி சென்றுவிடும் என்பது 49 சதவீதம் பேரின் கருத்தாக இருக்கிறது. அது இளைய தலைமுறையை மிகவும் தப்பான பாதைக்கு அழைத்து சென்றுவிடும் என்று 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 4 சதவீதம் பேர் எந்த தொந்தரவும் ஏற்படாது என்றிருக்கிறார்கள். 12 சதவீதம் பேர் எல்லா எல்லைகளையும் தாண்டி மனிதர்களை எங்கோ கொண்டு போய்விட்டுவிடும். வாழ்க்கையையே பாழாக்கிவிடும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

சைபர் செக்ஸ் இணைய தொடர்புகளில் இருப்பவர்களில் ஆண், பெண் வித்தியாசம் உண்டா?



ஆணும் பெண்ணும் இதில் ஒரே மாதிரிதான் என்பது 79 சதவீதம் பேரின் கருத்து. 20 சதவீதம் பேர் பெண்களின் பங்களிப்பு குறைவு என் கிறார்கள். 1 சதவீதம் பேர் ஆண்கள்தான் இதில் குறைவான நிலையில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

சைபர் செக்ஸ் சாட்டிங்கில் அறிமுகமாகும் ஆணும், பெண்ணும் பின்பு நேரடியாக பாலியல் ரீதியாக தொடர்பு ஏற் படுத்திக்கொள்வார்களா?

60 சதவீதம் பேர் ஆமாம் என்கிறார்கள். அதற்கான வாசலை அது திறந்து விட்டுவிடும் என்கிறார்கள். 40 சத வீதம் பேர் அப்படிப்பட்ட சூழல் நேராது என்று சொல்கிறார்கள்.

சமூகவலைத்தள தகவல் தொடர்புகள் பல தரப்பினரையும் ஒரே குழுவில் இணைக்கின்றன. பள்ளியில் ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒன்றிணைந்து குழு ஒன்றை உருவாக்கி நலம் விசாரிப்பில் நாட்டம் கொள் கிறார்கள். அது நல்லதுதான். ஆனால் இதிலும் ஒருசில வில்லங்க உறவுகள் ஏற்படுகின்றன. 30 ஆண்டுகாலம் கழித்து தகவல் தொடர்பில் இணைந்திருப்பவர்களும் இருக்கிறார்கள். பழைய நினைவுகளை அசைபோடுபவர்கள் ஒருகட்டத்தில் தேவையற்ற தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள்.

‘அந்த காலத்தில் நான் உன் மீது ஆசைப்பட்டேன். நீதான் என்னை கவர்ந்த முதல் அழகி. இப்போதும் நான் உன் நினைவிலேயே இருக்கிறேன்’ என்பன போன்ற தேவையற்ற வார்த்தைகள் இடைச்சொருகலாக திணிக்கப்படுகின்றன. நமக்கு திருமணமாகி நமது பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாம் தாத்தா ஆகிவிட்டோம் என்ற எண்ணம் இல்லாமல் மனம் உதிர்க்கும் வார்த்தைகளை கொப்பளித்துவிடுகிறார்கள். 

பழைய நினைவுகளை மீட்டெடுப்பது புத்துணர்வை கொடுக்கும் என்று நினைத்து ஒரு சிலர் இப்படி தேவையற்ற பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைத்துவிடுகிறார்கள். தகவல் பரிமாற்றத்திற்கான ‘டேட்டிங் ஆப்’களும் நிறைய இருக்கின்றன. இதில் ஐ.டி. துறையில் இ ருப்பவர்களும், மாணவர்களும் இணைந்திருக்கிறார்கள். சமீபகாலமாக இதன் பாதிப்புகள் பெருமளவு கூடி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களையும், இணையதளங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மன கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணராமல் இருந்தால் அவர்களை சமூகமும், குடும்பமும் புறக்கணிக்கும் அவலம் உருவாகும். மன அழுத்தம் அதிகமாகி மன நோயாளியாகும் சூழலும் உருவாகலாம்.

இந்த புதை குழிகள் மீது கவனம் தேவை! புதைந்தபின் வருந்தி பலன் இல்லை!

இந்த ஒட்டுமொத்த சர்வே கணிப்பு சமூகத்தில், குடும்பத்தில் என்ன மாதிரியான சிக்கல்கள், பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பிரபல செக்ஸாலஜிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது பற்றிய தொகுப்பு..

* முன்பு பாலியல் ரீதியான வரைமுறையற்ற பிரச் சினைகளுக்கு ஆண்கள்தான் காரணமாக இருந்தார்கள். இப்போது அதே அளவுக்கு பெண்களும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் மாற்றங்கள் அவர்களின் தாம்பத்திய வாழ்க் கையில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

* முன்பு தவறான தொடர்பு ஏற்படுத்தி கொள்வதில் ஆண்கள்தான் முன்னிலையில் இருந்தார்கள். ஆனால் இப்போது சமூக வலைத்தளம் என்னும் மாயவலை ஆண்களை போலவே பெண்களையும் கவர்ந்து இழுத்துகொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் மனோதத்துவ ஆலோசகர்களை தேடிச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. இப்போது பெண்களின் எண்ணிக்கையும் கூடி இருக்கிறது. உயர் கல்வி, நல்ல வேலை, வசதி வாய்ப்பில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்களும் இத்தகைய பிரச்சினைகளுக்காக மனோதத்துவ ஆலோசகர்களை நாடும் நிலை ஏற் பட்டுள்ளது.

* இவர்களை தடம்புரள வைக்கும் உறவுகளில் சிக்க வைக்கும் முதல் வார்த்தை, ‘குட் மார்னிங்’. அந்த மெசேஜ்தான் அவர்களுக்குள் ஆரம்பக்கட்ட தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கும் வார்த்தையாக இருக்கிறது. அதன் பிறகு அன்பான நலம் விசாரிப்புகள், ஆறுதலான பேச்சுகள், கனிவான உரையாடல்கள், மனதை வசீகரிக்கும் வார்த்தை ஜாலங்கள் போன்ற தகவல் பரிமாற்றங்கள் இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி விடுகிறது. ஒருவருக்கொருவர் தொடர்பை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். நாளடைவில் அந்த உறவுகள் தவறான உறவு களாக பலப்பட்டுவிடுகிறது.

* சைபர் தொடர்பை சொர்க்கத்திற்கான கதவுகளை திறக்கும் ரகசிய வாசல் என்று பலர் கருத தொடங்கியிருக்கிறார்கள். இந்த சைபர் நட்பில் இளைய தலைமுறையினர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நடுத்தர வயதில் இருப்பவர்களும் வழுக்கி விழுகிறார்கள். அது அவர்கள் குடும்பத்தையே சிதைக்கும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் பல குடும்பங்கள் புதை குழிக்குள் அமுங்கி உள்ளன.
Tags:    

Similar News