லைஃப்ஸ்டைல்
பெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்

பெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்

Published On 2019-10-08 04:12 GMT   |   Update On 2019-10-08 04:12 GMT
விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி? என்று அறிந்து கொள்ளலாம்.
விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

இதோ 5 டிப்ஸ்கள்:

* நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

* உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து ‘மீட்டிங்’ போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தத்தமது வேலையை முடித்தபின் ‘மீட்டிங்’கை நடத்துங்கள்.

* வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

* குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் ‘ஈகோ’ தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

* குழு உறுப்பினர்கள் பலர் சரியாக வேலை செய்யாமல், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தலையில் எல்லா வேலையும் விழும்போது அவர் மனம் கசந்து வெறுத்துப் போவார். உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால், குறிப்பிட்ட ‘பிராஜெக்ட்’ முழுவதையும் கவனிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லா விட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

Tags:    

Similar News