லைஃப்ஸ்டைல்
பெண் இன்ஷியல் மாறுவது

பெண் இன்ஷியல் மாறுவது...

Published On 2019-09-21 02:54 GMT   |   Update On 2019-09-21 02:54 GMT
ஒரு பெண் இன்ஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதையை சார்ந்ததும்கூட.
பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யும் போது, கணவர் பெயரை சேர்த்தோ அல்லது அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுப்பார்கள்.

அதே நேரத்தில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும் போது, தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள். அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களில் தந்தை பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்போ-பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்சினைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்?

முன்பெல்லாம் கிராமங்களில் கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படி, ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு இருக்க முடியும். ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷியலாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக்கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம். இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கி உள்ளது.

ஒரு பெண் இன்ஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதையை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான். நேசித்து திருமணம் செய்திருந்தாலும் கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும். திருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களாகவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் தந்தையின் பெயரை இன்ஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள்ளது. தாயின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளா உள்பட பல இடங்களில் தாயின் பெயரையும் இணைப்பதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.
Tags:    

Similar News