லைஃப்ஸ்டைல்
பெண்களில் மனச்சோர்வு

பெண்களில் மனச்சோர்வு என்றால் என்ன?

Published On 2019-09-17 03:25 GMT   |   Update On 2019-09-17 03:25 GMT
ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு உடல் சார்ந்த நிலைகளைக் கடக்கிறார்கள்: பருவம் அடைதல், கர்ப்பம், தாய்மை, மாதவிடாய் முடிந்தகாலம் மற்றும் வயதான காலம். இந்த நிலைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மிகவும் திகைப்பூட்டக்கூடும். சில சூழ்நிலைகளில் இந்த நிலைகள் உடல் சார்ந்த நோய்களை உண்டாக்கி, அவை நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும்.

அத்தகைய நோய்களைச் சமாளிக்க முயற்சி செய்வது அந்தப் பெண்ணின் மனநலத்தைப் பாதிக்கலாம், மனச் சோர்வு அல்லது பதற்றக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களில் மனச்சோர்வை உண்டாக்கக் கூடிய சில காரணிகள்:

மாதவிடாய்ச் சுழற்சி மாற்றங்கள், அது தொடர்பான நோய்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய அறிகுறிகள் (PMS), மெனோபாஸ், பாலியல் சார்ந்த மற்றும் உடல் பிம்பம் சார்ந்த பிரச்னைகள்

தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இல்லாமல் இருத்தல் (பெற்றோர், கணவன் அல்லது மாமனார், மாமியாரால் கட்டுப்படுத்தப்படுதல்)

பணி, திருமணம் அல்லது இடம் பெயர்தல் காரணமாக ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள்

திருமணம் சார்ந்த பிரச்னைகள், உதாரணமாக விவாகரத்து, கள்ள உறவு அல்லது பொருந்தாத்தன்மை

இதற்கு முன் ஏற்பட்ட மனச்சோர்வுகள், குழந்தை பெற்றபிறகு ஏற்பட்ட மனச்சோர்வு

சமூக ஆதரவு இல்லாமல் இருத்தல்

விரும்பாத கர்ப்பம், கருச்சிதைவு அல்லது குழந்தைப்பேறு இல்லாமல் இருத்தல்

நிறையப் பொறுப்புக்களைச் சுமக்க நேர்தல் அல்லது தனிநபராகக் குழந்தையை வளர்த்தல்

உடல் மற்றும் மன முறைகேட்டினால் ஏற்படும் அதிர்ச்சி. 
Tags:    

Similar News