லைஃப்ஸ்டைல்
குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்

குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்

Published On 2019-09-07 05:29 GMT   |   Update On 2019-09-07 05:29 GMT
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைகள் நடைமுறை வாழ்வின் யதார்த்தம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆணாதிக்க சிந்தனையினர். இந்த சிந்தனையை பெண்ணடிமை பழகிப் போன பெண்களும் கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.

கல்வியிலும், தொழில் துறையிலும், பொருளாதார சூழலிலும், வாழ்க்கைத் தரத்திலும் என எல்லா நிலைகளிலும் வளர்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் வாழும் இந்த நாட்டில் தான் வருடம் தோறும் சுமார் இருபதாயிரம் இளம் பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு தொன்னூற்று ஐந்து விழுக்காடு ஏதோ ஒரு குடும்ப உறவினரே காரணமாய் இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகளை நடத்துவதில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டுகிறது.

திருமணமாகி கணவனின் வீட்டிற்குள் வரும் பெண் எப்போது வேண்டுமானாலும், எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும், எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்னும் அச்சம் காரணமாகவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சத்துக்கு வராமல் குடும்பச் சுவர்களில் கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.

‘என் பொண்டாட்டியை அடிக்கக் கூடாதா’ எனும் ஆணாதிக்கக் குரலின் ஆணவமும், ‘உன் புருஷன் தானே அடிச்சான் வேற மனுஷன் இல்லையே ‘ என்னும் பெண்ணடிமை பழகிப்போன குரலும் இந்த சமூகத்தில் பெண்கள் சுயமாய் சிந்தித்து முடிவெடுத்து செயலாற்றும் தன்மையற்றவர்கள் என சித்தரிக்கிறது.அதனால் தான் தமிழக கிராமங்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
Tags:    

Similar News