லைஃப்ஸ்டைல்
ஐடி துறையில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள்

ஐடி துறையில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள்

Published On 2019-08-28 03:19 GMT   |   Update On 2019-08-28 03:19 GMT
ஐ.டி நிறுவன பெண் ஊழியர்களுக்குத் திருமணத்துக்கு முன்புதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் ஏற்படுது. அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு, உயரதிகாரிகளின் தொந்தரவுகள் அதிகம் நிகழ ஆரம்பிக்கும்.
ஐ.டி நிறுவனங்களின் எல்லாத் துறைகளிலும் பெண்களும் இருப்பாங்க. அவங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இரவுப் பணியில் ஆண், பெண் இருவரும் வேலை செய்றாங்க. ஆணுக்கோ, பெண்ணுக்கோ வேலை விஷயத்துல எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் பணித்திறனுக்கு மட்டுமே ஊதியம் மற்றும் பதவி உயர்வு கொடுக்கப்படுது. அதேசமயம் பெண்களுக்கு ஆறு மாத சம்பளத்துடன், மகப்பேறு கால விடுமுறை நிச்சயம் கொடுக்கப்படுது.

ஐ.டி நிறுவன பெண் ஊழியர்களுக்குத் திருமணத்துக்கு முன்புதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் ஏற்படுது. அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு, உயரதிகாரிகளின் தொந்தரவுகள் அதிகம் நிகழ ஆரம்பிக்கும். குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளர்ப்பு பெண்களின் பொறுப்பாகிடுது. இதனால், குடும்பம், வேலை என இரண்டு சூழலிலும் பெண்கள் பல்வேறு மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், வேலையில் குடும்பம் சார்ந்த நினைவுகளும், வீட்டில் வேலை சார்ந்த நினைவுகளும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். வேலைக்குப் போனாலும், வீட்டு வேலைகள் செய்றதில் பெண்களின் பங்குதான் பிரதானமாக இருக்குது. அதனால் அலுவலக வேலை, வீட்டு வேலைனு ஒவ்வொரு நாளும் பெண்கள் இரண்டு ஷிஃப்ட் வேலை செய்ற நிலை இருக்குது.

அதேசமயம் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது. ஈகோ பார்க்காமல் அவர்களும் குழந்தை வளர்ப்பு, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தால், நிச்சயம் பெண்களால் வேலையில் நன்றாகக் கவனம் செலுத்த முடியும். ஆனால், இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது பெரிய கேள்விக்குறி. திருமணத்துக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட் பெண்களுக்குதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் நிகழ்கின்றன.

பெண்களின் திறமைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால், அவர்களாலும் ஒரே நிறுவனத்தில் நீண்ட காலத்துக்கு வேலை செய்ய முடியும். அதனால் உயர் பொறுப்புகளுக்கு உயரும் பெண்களின் எண்ணிக்கையும் உயரும். `ஆண்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை. இந்த விகிதாசாரம் (pay parity) சரிசெய்யப்பட வேண்டும்'னு வெளிநாடுகளில் பெண்கள் தைரியமாகப் போராடுறாங்க.

ஐ.டி நிறுவனங்கள்ல பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான விளக்கங்களை, ஓர் ஊழியரைப் புதிதாக வேலைக்கு எடுக்கும்போதே தெளிவா சொல்லிடுவோம். அதையும் மீறி பாலியல் தொந்தரவுகள் நிகழ்ந்தால், பெண்கள் தைரியமாகப் புகார் செய்யலாம். அதுக்கு நிறைய மறைமுக வழிவகைகள் செய்யப்பட்டிருக்கு. தவறு செய்த ஆண் யாரா இருந்தாலும் அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
Tags:    

Similar News