லைஃப்ஸ்டைல்
சொத்து பத்திரம்

சொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2019-08-21 03:06 GMT   |   Update On 2019-08-21 03:06 GMT
சொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* கிரைய பத்திரங்கள் எழுதும்போது, எழுதிக் கொடுக்கும் நபரிடமிருந்து எதிர்காலத்தில் சொத்தைப் பொறுத்து, ஏதாவது வில்லங்கம் இருக்கும் நிலையில், எனது சொந்த செலவில் தீர்த்துக் கொடுக்கிறேன் என்ற ஷரத்தை தெளிவாக எழுத வேண்டும்.

* பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுல் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம்.

* செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

* மேலும், செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

- சா.மு. பரஞ்சோதி பாண்டியன், ரியல் எஸ்டேட் துறை ஆலோசகர்.
Tags:    

Similar News