பெண்கள் உலகம்
மாதவிடாய் வலி

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எவ்வளவு நாள் வலி நீடிக்கலாம்?

Published On 2021-04-08 12:58 IST   |   Update On 2021-04-08 12:58:00 IST
சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்குமான திறனை பாதிக்கிறது.
மாதவிடாய் காலங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் வலியை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தசைப்பிடிப்பு, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளுடன் அழற்சி எதிர்ப்பு மருந்துகளான (NSAID கள்) வலியுறுத்துகின்றனர்.

சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்குமான திறனை பாதிக்கிறது.

உங்களுக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் பயன்படாத சமயங்களில் மகளிர் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

பெண்கள் தங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை அசால்ட்டாக விடுவதால் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல நோய் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் கண்டறியப்படாமலே போகிறது.

சமீபத்திய ஆய்வின் படி நாள்பட்ட வலியை அனுபவிக்கும் கிட்டத்தட்ட 2,500 பெண்களில் , 66 சதவீதம் பேர் தங்கள் பாலினம் காரணமாக மருத்துவர்கள் தங்கள் வலியை சரியாக கவனிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

பெண்கள் தாங்கள் கூறும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளும் மருத்துவரிடம் முதலில் செல்ல முயலுங்கள்.

மாதவிடாய் பிரச்சனைகள் உங்க அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறுங்கள்.

Similar News