லைஃப்ஸ்டைல்
வெள்ளைப்படுதல்

பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்...அலட்சியம் வேண்டாம்....

Published On 2021-04-07 06:13 GMT   |   Update On 2021-04-07 06:13 GMT
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும். அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.

மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.

வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்.
Tags:    

Similar News