லைஃப்ஸ்டைல்
எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்

எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்

Published On 2021-03-05 06:18 GMT   |   Update On 2021-03-05 06:18 GMT
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும் என்று தெரிவதில்லை. அதிக நேரம் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்றாவிட்டால் பல்வேறு உடல் பிரச்சனைகள் வரலாம்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களை சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களையே சார்ந்து உள்ளனர். தற்போது நாப்கின்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.

சானிட்டரி நாப்கின், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப் என அனைத்தும் தற்போது கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது சானிட்டரி நாப்கின்களைத் தான். ஏனெனில் சானிட்டரி நாப்கின்களை ரீமூவ் செய்வதும் பயன்படுத்துவதும் எளிது. நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி நாப்கின்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று நினைக்கின்றனர்.

பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் (28 நாட்களுக்கு ஒரு முறை) சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஏனெனில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும்.

உங்க மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கு இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும்.

எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். ஈரமான உள்ளாடைகள் உங்களுக்கு நோய்த்தொற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

முடிந்த வரை கெமிக்கல்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

உங்க பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

உங்க பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் தடிப்புகள் காணப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

சானிட்டரி நாப்கின்களை சரியாக அகற்றி குப்பையில் போடுங்கள்.

சானிட்டரி நாப்கின் மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் பெண்கள் பொதுவாக இதனை பின்பற்றுவதில்லை.
Tags:    

Similar News