லைஃப்ஸ்டைல்
தாம்பத்தியம்

திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

Published On 2021-03-02 07:32 GMT   |   Update On 2021-03-02 07:32 GMT
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே வெளிப்படுத்துகிறது.
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே தகவல் ஒன்று வெளிப்படுத்துகிறது. கூடவே அதில் சில சிந்திக்கவைக்கும் தகவல்களும் இருப்பதாக கூறுகிறது. தனியார் பாலியல் நல அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் அந்த சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்:

‘மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.

தாம்பத்திய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்தியம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.

பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
Tags:    

Similar News