லைஃப்ஸ்டைல்
கர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்

கர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்

Published On 2021-02-25 04:27 GMT   |   Update On 2021-02-25 04:27 GMT
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…

* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.

* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.

* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.

* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.

* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.

* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.

* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.

 பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.

வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
Tags:    

Similar News