லைஃப்ஸ்டைல்
பருவமடைந்த பெண்களுக்கான உணவுகள்

பருவமடைந்த பெண்களுக்கான உணவுகள்

Published On 2021-02-16 06:28 GMT   |   Update On 2021-02-16 06:28 GMT
பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?
பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் மனதிற்கும் உடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது பெண்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பருவம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?

புரதத்திற்கு பருப்பு வகைகளையும், கால்சியத்திற்கு முருங்கைக்கீரை சேர்த்த கேழ்வரகு அடை, இவற்றையும் துத்தநாகத்திற்கு எள்ளையும், வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று நாட்கள் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள கீரை மசியல், கீரைப்பொரியல் என கீரையைப்பருப்புடன் சேர்த்து சேர்த்து கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை துவையலாகவோ, சட்னியாகவோ சேர்த்து கொள்ளலாம்.

வாரம் ஒருமுறை மீன் சேர்த்து கொள்ள வேண்டும். பொரித்த மீனை விட குழம்பு வைத்த மீன் சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் புரதம் அதிகம் இருக்கும் சிறிய வகை மீன்கள் நல்லது.

தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. சைவ உணவு உண்பவர்கள் பருப்பை கட்டாயம் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

எள், வால்நட், பாதாம், முந்திரி இவற்றுடன் உலர் திராட்சையும் பேரீச்சம்பழமும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினம் ஒரு உருண்டை சாப்பிடலாம்.
Tags:    

Similar News