லைஃப்ஸ்டைல்
கர்ப்பம்

ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறக்க காரணம்

Published On 2021-02-13 07:36 GMT   |   Update On 2021-02-13 07:36 GMT
ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள்.
சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.

பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டை குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்' என்கிறார்கள்.

குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த குழந்தைகள் இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு சிறுநீரகம்,, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.

இன்னொரு வகையான இரட்டை பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக்குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.

இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.

இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து அவர் சாதனை செய்துள்ளார்.
Tags:    

Similar News