பெண்கள் உலகம்

பெண்களுக்காக பிரத்தியேக வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்

Published On 2022-07-05 04:23 GMT   |   Update On 2022-07-05 04:23 GMT
  • பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 'சிரோனா ஹைஜீன்' என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது.

இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இனி தங்கள் மாதவிடாய்களை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு ஆப் தனியாக தேவையில்லை. இதற்காக 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு முதல் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பவேண்டும்.

பின்னர், பயனர்கள் தங்கள் விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கவேண்டும். மேலும் சிரோனா நிறுவனம் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.அந்த விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News