பெண்கள் உலகம்

ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வாங்குவதில் அதிக அக்கறை காட்டும் பெண்கள்

Update: 2022-09-21 04:45 GMT
  • மக்கள் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
  • ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த தயாரிப்புகள் மக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி நம் வீட்டை எளிதாக இயக்குவதற்கு உதவி செய்கின்றன.இந்த மின்னணு சாதனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. நம் வீட்டிற்கு தேவையான சில ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

ரவுட்டர்

ரவுட்டர் மற்றும் இணையம் ஆகியவை ஸ்மார்ட் ஹோம் அமைப்பிற்கான அடிப்படைத் தேவையாகும்.இதில் முதலாவதாக கவனிக்கப்பட வேண்டியது இவற்றின் செயல்பாடு மற்றும் செயல்திறன் வேகம் ஆகியவை வன்பொருள் திறன்களை பொறுத்ததாகும்.ரேம், நெட்வொர்க் கார்டு மற்றும் ஃபார்ம்வேர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மினி-கம்ப்யூட்டர் என்று ரவுட்டரைச் சொல்லலாம்.மேற்கூறிய இவை அனைத்தும் ரவுட்டரின் விலையை தீர்மானிக்கின்றன.இதில் விலை உயர்ந்தவை அதிக சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.

ஸ்மார்ட் ஸ்பீக்கர்

ஸ்மார்ட் ஹோம் கட்டும் போது, மூளையாக செயல்படக்கூடிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் உங்களுக்கு தேவைப்படும். குரல் உதவியாளர் ஆதரவுடன் வரக்கூடிய இந்த ஸ்பீக்கர்கள் உங்கள் வீடுகளில் இருக்கக்கூடிய மற்ற ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளான லைட், ஃபேன், காபி மெஷின் என எதை வேண்டுமானாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய வகையில் வருகின்றன. இந்த சாதனம் உங்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை நிர்வகிப்பதை விட அதிகம் செய்கின்றன.அலாரங்கள் மற்றும் நினைவூட்டல்களை அமைப்பதற்கும், இசை அல்லது ஆடியோபுக்குகளை இயக்குவதற்கும், கூகிள் மூலம் தேடிப்பார்த்து விரைவாக கேள்விகளைக் கேட்பதற்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் லைட்

சிறந்த ஸ்மார்ட் லைட் பல்புகள் சரியான வெளிச்சத்தை வழங்குவதோடு, உங்கள் தற்போதைய ஸ்மார்ட் ஹோம் சிஸ்டத்துடன் எளிதாக இணைகின்றன.ஸ்மார்ட் லைட்டுகளை நம்முடைய நெட்வொர்க்கில் இணைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் லைட்டுகளை ஆன் செய்யவும் ஆஃப் செய்யவும் நாம் எழுந்து வந்து செய்யவேண்டிய அவசியம் இல்லை.பெரும்பாலான ஸ்மார்ட் பல்புகள் துணை பயன்பாடுகளுடன் வருகின்றன, எனவே நீங்கள் இன்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை வாங்கவில்லை என்றாலும், அவற்றை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய வசதியுடன் வந்திருக்கின்றன.

ஸ்மார்ட் பிளக்

ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் பிளக்குகளும் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்கின்றன.ஸ்மார்ட் பிளக்குகள் அடிப்படையில் ப்ளக்-இன் அவுட்லெட்டுகள் அல்லது பவர் ஸ்ட்ரிப்களுடன் வரக்கூடிய மொபைல் செயலிகளுடன் வருவதால் அவற்றை உங்கள் வீட்டு நெட்வொர்க்குடன் இணைத்துக்கொள்ளலாம். லைட்டுகள் அல்லது மின்விசிறிகள் போன்ற உங்களின் தற்போதைய சாதனங்களை மைண்ட்லெஸ்ஸிலிருந்து ஸ்மார்ட்டாக மாற்றும் பணியை இவை அற்புதமாக செய்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் சாதனங்களை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான அட்டவணையை நாம் அமைத்துக் கொடுத்து அவை எப்படி செயல்படுகின்றன மற்றும் எவ்வளவு ஆற்றலை பயன்படுத்துகின்றன என்பதையும் கண்காணிக்கலாம்.

ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்

இந்த ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் செயலிகள் மூலம் இயக்கப்படுகின்றன. வைஃபை அல்லது செல்லுலார் சேவை மூலம் எந்த இடத்திலிருந்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.இவை வீட்டினுள் இருக்கும் வெப்பநிலை, குளிரின் அளவு, அறைக்குத் தேவைப்படக்கூடிய வெப்பநிலை போன்றவற்றை நமக்கு தெரியப்படுத்துகின்றன.சில வீடுகளில் வீடு முழுவதுமே சென்ட்ரலைஸ்டு ஏசி பொருத்தி இருப்பார்கள். அவர்களுக்கும் அதேபோல் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கும் மிகவும் தேவையான ஸ்மார்ட் உபகரணம் என்று இதனைச் சொல்லலாம்.இந்த சாதனத்தை உங்கள் பிற ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளுடன் இணைக்கலாம் மற்றும் உங்கள் சிஸ்டம் காலப்போக்கில் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் காண்பிக்க கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் டிவி

ஆண்டெனா அல்லது கேபிளைப் பயன்படுத்தும் வழக்கமானபழைய டிவிகள் போலல்லாமல் இன்றைய நவீன உலகில், மக்கள் அதிக தொழில் நுட்பத்துடன் வரும் டிவிகளை வாங்க விரும்புகிறார்கள்.இப்பொழுது வரும் நவீன தொலைக்காட்சிகளை இணையத்துடன் இணைக்க முடியும். அதுமட்டுமல்லாமல் வழக்கமான ஸ்மார்ட்ஃபோனைப் போலவே பரந்த அளவிலான பயன்பாடுகளை ஆதரிக்கும் விதத்தில் இருக்கின்றன. இதன் மூலம் ஒரு புதிய பொழுதுபோக்கு உலகத்திற்கான அணுகலை நாம் பெற முடியும். இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மூலம் யூடியூப் வீடியோக்கள், மற்றும் இணையதளத்தில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் பலவிதமான விளையாட்டுக்களை விளையாடுவதுடன் சமூக ஊடகங்களையும் இவற்றின் மூலம் பார்க்க முடியும்.

ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா

பாதுகாப்பு கேமராக்கள் ஒரு பயனுள்ள முதலீடு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கேமராக்களை பொருத்தும் இடத்திற்கு 24 மணி நேரமும் உரிய பாதுகாப்பை வழங்குகின்றது. உங்கள் வீட்டு வைஃபை இணைப்பைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் கேமராக்கள் நேரலை மற்றும் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கிளவுட் சேமிப்பகத்திற்கு அனுப்புகின்றது.நிகழ்நேரத்தில் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.சில மாடல்கள் வீட்டிலுள்ள எந்தச் செயலையும் உங்களுக்குத் தெரிவிக்க விழிப்பூட்டல்களையும் அனுப்புகின்றன.ஆனால் படத்தைப் பிடிப்பது மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அப்பால், இந்த ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் உங்கள் கண்காணிப்பு அமைப்பிலிருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் கூடுதல் அம்சங்களையும் வழங்குகின்றன. இந்த அம்சங்களில் டேக்கிங், ஜியோஃபென்சிங் மற்றும் இருவழி தொடர்பு ஆகியவை அடங்கும்.

ஸ்மார்ட் வீடியோ டோர்பெல்

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க உதவும் அருமையான சாதனமாக இவை செயல்படுகின்றன.கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் வைஃபை இணைப்புடன் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் சாதனம், முன் வாசலில் இருந்து உங்கள் மொபைலின் டோர்பெல் செயலிக்கு நேரடி வீடியோ ஸ்ட்ரீமை அனுப்புகிறது.இதன் மூலம் நீங்கள் வீட்டு வாசலில் இருக்கும் நபரை பார்த்து பேச முடியும்.நீங்கள் வெளியில் இருக்கும் போது வரும் நபர்களின் காட்சிகளையும் வீடியோ டோர்பெல் பதிவு செய்து சேமிக்கும்.

ஸ்மார்ட் ஸ்மோக் டிடெக்டர்

நாம் எங்கிருந்தாலும் நம் வீட்டில் விபத்துகளால் ஏற்படும் புகை அலாரத்தை நிறுவுவது சிறந்தது.ஸ்மார்ட் ஸ்மோக் டிடெக்டர்கள் கிளவுடிற்கு சிக்னலை அனுப்புவதன் மூலம் உங்கள் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் ஹவுஸ் எலக்ட்ரானிக்ஸ் உடன் தடையின்றி ஒருங்கிணைக்கப் படக்கூடிய சிறப்பம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தீ விபத்து ஏற்படும் போது நீங்கள் வீட்டில் இருந்தால், நீங்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைக்கு உங்களை பாதுகாப்பாக வழிநடத்த உங்கள் ஸ்மார்ட் லைட்டிங் சிஸ்டத்துடன் இந்த ஸ்மார்ட் ஸ்மோக் டிடெக்டர் இணைந்து செயல்படுகின்றது.

Tags:    

Similar News