லைஃப்ஸ்டைல்
சூரியனும்.. சருமமும்..

சூரியனும்.. சருமமும்..

Published On 2020-03-31 03:52 GMT   |   Update On 2020-03-31 03:52 GMT
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். நிறைய பேர் சன்ஸ்கிரீன் கிரீம்களை சரும பாதுகாப்புக்கு பயன்படுத்துவார்கள். சிலருக்கு அதிலிருக்கும் ரசாயனங்கள் ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி சருமத்தை சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கலாம்.

கற்றாழை ஜெல் மற்றும் கற்றாழை கிரீம் வகைகள் சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அவற்றுள் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்திருப்பதால் வெயில் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் சேதங் களையும் சரி செய்ய உதவும்.

சருமத்தின் மென்மைத்தன்மையை தக்கவைப்பதற்கு ‘ஷியா பட்டர்’ பயன் படுத்தலாம். அதிலிருக்கும் எண்ணெய் பசையானது சருமத்தில் எளிதாக உறிஞ்சப்பட்டு ஈரப்பதத்தை தக்கவைக்கும். சருமத்திற்கும், வெளிப்புற சுற்றுச் சூழலுக்கும் இடையே கவசமாக செயல்பட்டு சரும பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தையும் அது குறைக்கும்.

ராஸ்பெர்ரி பழத்தில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்தை வளமாக்கும் தன்மை கொண்டவை. புற ஊதாக்கதிர்களை சிதறடிக்கும் தன்மை கொண்டவை. சரும தடிப்பு மற்றும் தோல் அழற்சி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும். சிவப்பு ராஸ்பெர்ரி கிரீம், ராஸ்பெர்ரி எண்ணெய் போன்றவற்றையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

பாதாம் எண்ணெய்யில் புரதம், வைட்டமின் ஈ, பி உள்ளிட்ட சத்துக்கள், கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. அது புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி இளமையையும் தக்கவைக்கும்.
Tags:    

Similar News