லைஃப்ஸ்டைல்
பேஸ் மாஸ்க் ஷீட்

முகத்திற்கு பேஸ் மாஸ்க் ஷீட் போடும் போது செய்யும் தவறுகள்

Published On 2020-03-09 06:34 GMT   |   Update On 2020-03-09 06:34 GMT
பேஸ் ஷீட் மாஸ்க் பலமுறை பயன்படுத்தியும் அதன் நன்மைகளை உங்கள் சருமம் பெறவில்லை என்றால், தவறு நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் இருக்கலாம்.
ஷீட் மாஸ்க் பல வகைகளில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. உங்கள் சருமத்தின் பராமரிப்பை மிக எளிதாக்கி விடும் இந்த பேஸ் ஷீட் மாஸ்க் ! ஆனால், பலமுறை பயன்படுத்தியும் அதன் நன்மைகளை உங்கள் சருமம் பெறவில்லை என்றால், தவறு (mistakes) நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் இருக்கலாம்! ஆகவே, நாங்கள் உங்களிடம் நீங்கள் மறதியாக ஷீட் மாஸ்க் பயன்பாட்டில் செய்யக்கூடிய சில தவறுகளை கூற உள்ளோம். இதை திருத்தி அடுத்து முறை பேஸ் ஷீட் மாஸ்க்கை (face sheet mask)  சரியாக பயன்படுத்துங்கள்!

* உங்கள் மாஸ்க்கை அணியும் முன் உங்கள் முகத்தை சுத்தம் செய்வது அவசியம். எப்போதும் நீங்கள் மற்ற மாஸ்க் போடும் போது முகம் கழுவுவதை போல்தான் இதற்கும் செய்வது முக்கியம். இதனால், உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கு விலகிவிடும். இல்லாவிட்டால், முகத்தில் இருக்கும் அழுக்கின் மேல் எந்த மாஸ்க்காக இருந்தாலும் திறம்பட வேலை செய்வது கடினம்.

* எந்த சரும பராமரிப்பு பொருள் ஆக இருந்தாலும், உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்று நன்று அறிந்து பயன்படுத்துங்கள். உங்கள் தோழி ஒரு பேஸ் மாஸ்க்கை பரிந்துரைத்தால் அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்று கண்டு அறியுங்கள். இல்லாவிட்டால்,ஒரு தவறான மாஸ்க் உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது. அது மேலும் பல சரும பிரச்னைகளை  கூட உண்டாக்கலாம் .

* நீங்கள் நினைக்கலாம்.. அதிக நேரம் பஸ் மாஸ்க் அணிந்திருந்தாள் அதிலிருக்கும் பலன்களை அதிகமாக பெற முடியும் என்று. தவறு! இதை நீங்கள் 10 -20 நிமிடம் மட்டுமே வைக்க வேண்டும். அதற்க்கு மேல் வைத்தால் உங்கள் சருமம் மேலும் வறண்டு போய்விடும். உங்கள் சருமத்தில் இருக்கும் ஈர தன்மை  மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சி உறிஞ்சி விடும்.

* உங்கள் சருமத்தில் ப்ளாக் ஹெட் இருந்தால் அதற்கு ஒரு மாஸ்க், பருக்களிற்கு வேற ஒரு மாஸ்க், ஒரு பொலிவு பெற அதற்கேற்ற மாஸ்க் என்று நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால், வெவேறு மாஸ்க் வெவ்வேறு பலன்களை அளிக்க உதவும்!

* பேஸ் மாஸ்க் ஷீட்டை அணிந்து எடுத்த பின், ஏதேனும் ஒரு மிதமான மொய்ஸ்சுரைசர் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக ஒன்றை பூசுங்கள். ஏனெனில் மாஸ்க் ஷீட் பயன்படுத்திய பின் சருமம் வறண்டு போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

* எந்த பேஸ் மாஸ்க்காக இருந்தாலும் அதில் இருக்கும் நன்மை பயக்கும் அம்சங்களை உங்கள் சருமம் உள்வாங்க சிறிது நேரம் ஆகும். சிறிது நேரம் உங்கள் முகத்தில் இதை வைத்த பின், எடுத்து விட்டு மெதுவாக ஒரு மென்மையான துண்டில் தடவி எடுங்கள். மாஸ்க்கை எடுத்த பிறகும், சில அம்சங்கள் உங்கள் சருமத்தை பராமரிக்க வேலை செய்யும்! அதனால், மற்ற கையால் தயாரித்த மாஸ்க்கை பூசி உலர்ந்த உடன் கழுவுவதை போல், இதில் உடனடியாக முகம் கழுவுவதை தவிர்க்கவும்.
Tags:    

Similar News