லைஃப்ஸ்டைல்
முகப்பருவை குணமாக்கும் எண்ணெய்கள்

முகப்பருவை குணமாக்கும் எண்ணெய்கள்

Published On 2020-02-26 06:37 GMT   |   Update On 2020-02-26 06:37 GMT
ஹார்மோன்கள் குறைபாடு, உணவு பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் நமக்கு முகத்தில் பருக்கள் வருகின்றன.
நம்மில் சில பேருக்கு முகப்பரு அதிகமாக இருக்கும், அவை நம் முக அழகையே கெடுத்து விடும். நம்மில் 10% மக்களில் 9% மக்களுக்கு முகப்பருக்குள இருக்குமாம். பருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவே மாறி விடும். அதிலும் சில பேருக்கு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுவாகவும் இருந்து விடும்.

அதற்காக பார்லருக்கு சென்று நாம் அதிகமாக செலவிடுவதுண்டு. ஆனால் பரு பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. சில கிரீம்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் முக அழகே கெட்டுவிடுகிறது. இந்த பிரச்சனை காரணத்தால் நமக்கு அதிகமாக செலவிட்டு பயன் கிடைக்காமலே போயிருக்கும். இனி நீங்கள் அதை நினைத்து வருந்த வேண்டாம்.

ஹார்மோன்கள் குறைபாடு, உணவு பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் நமக்கு முகத்தில் பருக்கள் வருகின்றன. இவற்றால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் முகங்களில் அதிகமாக வலி ஏற்படும். இதை சரி செய்ய நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தினால் போதுமானது. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அத்தியாவசிய எண்ணெய்கள் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடச்செய்து, அதை ஹைட்ரேட் செய்கிறது. இந்த வகை எண்ணெய்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைய செய்கிறது. நம்மிடம் தூக்கமின்மையை தளர்த்தி, ஹார்மோன்களை கட்டுப்பாட்டுடன் வைக்க செய்கின்றது. இந்த வகை எண்ணெய்கள் பூசுவதன் மூலமாக நம் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கலாம்.

தேயிலை மர எண்ணெய்:

இதில் அலற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்க்கும் பண்பு மற்றும் கிருமி நாசினிகள் ஆகிய பண்புகள் இதில் உள்ளது. நம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வடுக்களை சரி செய்யும் தன்மை கொண்டது. தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரியான அளவு எடுத்துக்கொண்டு கலக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முகத்தில் தேய்த்து வந்தால், முகப்பரு பிரச்சனை காணாமல் சென்றுவிடும்.

பெர்கமோட் எண்ணெய்:

இது நம் முகத்தை ஒளிர செய்யும் வல்லமை உடையது. தேங்காய் எண்ணெய் மற்றும் பெர்கமோட் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து, முகத்தில் தொடர்ந்து ஒருவாரத்திற்கு தேய்க்க வேண்டும். பின்பு உங்கள் முகத்தில் உள்ள பரு மற்றும் வடுக்கள் காணமல் போவதை நீங்களே உணர்வீர்கள்.

கிராம்பு எண்ணெய்:

இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கொஞ்சமாக திராட்சை விதைகள், கிராம்புஎண்ணெய் 2 ஸ்பூன், வைட்டமின்- ஈ எண்ணெய் நான்கு சொட்டுகள் ஆகியவற்றை மொத்தமாக கலக்கி கொள்ளலாம். பின்பு பருக்கள், வடுக்கள் உள்ள இடத்தில் இந்த எண்ணெய்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்பு முதல் அனைத்தும் மறைந்துவிடும்.

லாவண்டர் எண்ணெய்:

லாவண்டர் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து முகத்திற்கு தேய்த்தால் தழும்பு மற்றும் பருக்கள் ஆகியவை மறைந்துவிடும்

ஆர்கனோ எண்ணெய்:

சமையலில் சுவைக்காக இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எது ஒரு வகையான மூலிகை எண்ணெய் ஆகும். ஆண்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது. முகத்தில் உள்ள வடுக்களை போக்க இந்த எண்ணையை தாராளமாக உபயோகிக்கலாம்.
ஆர்கனோ எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து முகத்திற்கு தொடர்ந்து தேய்த்து வந்தால், முகப்பருக்கள் முற்றிலும் அழிந்து விடும்.
Tags:    

Similar News