லைஃப்ஸ்டைல்
கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ்

இரவில் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாமா?

Published On 2020-02-17 03:57 GMT   |   Update On 2020-02-17 03:57 GMT
வறண்ட கூந்தல் அல்லது கரடுமுரடான கூந்தலாக இருந்தால் ஒரு இரவு முழுவதும் எண்ணெய் சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பயன் காணலாம்.
ஷாம்பூ பயன்பாட்டிற்கு முன்பு எண்ணெய் மசாஜ் செய்வதால் முடி உதிர்வை தடுக்கிறது. முந்தைய காலங்களில் இந்தியப் பெண்கள் பலர் இந்த முறைப்பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதாவது, ஷாம்பூக்கு முன் எண்ணெய் தேய்ப்பதன் மூலமாக கூந்தலுக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்த முடிகிறது. இது முடி உதிர்வை தடுக்கப் பயனளிக்கிறது.

ஒரு இரவு முழுவதும் எண்ணெய் சிகிச்சை செய்வதன் மூலம், உங்கள் கூந்தலுக்கு ஆதரவாக அது வேலை செய்யும். வறண்ட கூந்தல் அல்லது கரடுமுரடான கூந்தலாக இருந்தால் இந்த சிகிச்சை நல்ல பயன் அளிக்கக்கூடும். உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு எண்ணெய் மசாஜ் தேர்ந்தெடுத்து, மசாஜ் செய்துகொள்ளவும். அதன்பின்பு இரவில் அனைத்து வேலைகளையும் செய்து முடித்த பின்பு, தூங்க செல்வதற்கு முன்பு தலையணையில் ஒரு பழைய துண்டை விரித்து, அதன்மேல் தலையை வைத்து தூங்கவும். அடுத்த நாள் காலை, ஒரு மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசவும்.
Tags:    

Similar News