லைஃப்ஸ்டைல்
கூந்தல் மசாஜ்க்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்

கூந்தல் மசாஜ்க்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்

Published On 2020-02-07 03:19 GMT   |   Update On 2020-02-07 03:19 GMT
எண்ணெய் மசாஜ் செய்து கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதன்மூலம் கண்பார்வையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
எண்ணெய் மசாஜ் உங்களின் மனதையும் உடல் சூட்டையும் தனிக்கிறது. குறிப்பாக, மன அழுத்தத்தை இலகுவாக குறைத்து புத்துணர்ச்சி தருகிறது. மனஅழுத்தம் மூலமாகவும் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றுதான். அதனால், எண்ணெய் மசாஜ் செய்து கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதன்மூலம் கண்பார்வையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இயற்கையாக பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் உச்சந்தலையை ஆசுவாசப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெயை நோய் எதிர்ப்புக்கும் அழற்சிக்கு உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால், முடி உதிர்வை தடுக்க முடிகிறது. இது பெரிய ஈரப்பதமாகவும் செயல்படுகிறது. கூந்தலுக்கும் பளபளப்பை அதிகரிக்கிறது.

பாதாம் எண்ணெய்

பாதம் எண்ணெயில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இந்த எண்ணெய் கூந்தலை ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதேபோல கூந்தலுக்கு வலு மற்றும் பளபளப்பையும் கூட்டுகிறது. பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் தடவுவதன் மூலமாக தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்துலேகா பிரிங்கா எண்ணெயில் பாதாம் மற்றும் தேங்காய்களை கூட்டுப் பொருளாக கொண்டிருக்கிறது. இது ஆயர்வேத மூலிகையின் நன்மைகளுடன் முடியை வளர்ச்சியடையச் செய்கிறது.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது கூந்தல் வளர்ச்சிக்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ஆலிவ் எண்ணெய் கொழுப்பு அமிலங்களால் நிரம்பியது. இது உச்சந்தலையை குளிர்ச்சியூட்ட பயன்படுத்தப்படுகிறது. அதனால், உச்சந்தலையில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இது கூந்தலின் வேர் வரைச் சென்று, கூந்தலின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இந்த எண்ணெயில் இருக்கும் ஓலியாக் அமிலம் கூந்தலில் எளிதில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி, பளபளப்பு ஊட்டுகிறது.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் கூந்தலுக்கு அற்புதம் செய்யும். இது கூந்தலுக்கு முக்கியமான அலங்கார எண்ணெய் என்று சொல்லலாம். இதற்கு கூந்தல் இழப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. இதில் உள்ள ஹார்மோன் அல்லது பிஜிடி 2 அதிகம் உள்ளது. கூந்தல் ஆராய்ச்சியில், ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஒரு பொருளால் முடி இழப்பை தடுக்கிறது. இதனால், கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, முடி இழப்பு குறைகிறது.

எள் எண்ணெய்

ஆயுர்வேத பொருள்கள் தயாரிப்பில் எள் எண்ணெய் அடிப்படை கூட்டுப் பொருளாக பயன்படுகிறது. இது உச்சந்தலையில் நோய் தொற்றை தடுப்பதுடன், கூந்தலையும் வளர்ச்சியடையச் செய்கிறது. சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதன் மூலம் பொடுகை தடுக்கப் உதவுகிறது.

Tags:    

Similar News