லைஃப்ஸ்டைல்
பெண்களே அழகான புருவம் வேண்டுமா?

பெண்களே அழகான புருவம் வேண்டுமா?

Published On 2019-12-04 06:31 GMT   |   Update On 2019-12-04 06:31 GMT
பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய அழகிய புருவத்தை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்.
பெண்களின் அழகை முடிவு செய்வது அவர்களின் முகம் தான். அதிலும் புருவம் அழகாக இருக்கும் பெண்ணை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் என்பதை யாரால் தான் மறுக்க முடியும். வகிக்கிறது. இத்தகைய அழகிய புருவத்தை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்

உங்கள் புருவத்தின் முடி உதிர்கிறதா? இந்த ஆயில் மசாஜ் இதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, டபுள் பாயிலிங்க் முறைப்படி சூடாக்கி கொள்ளுங்கள். பிறகு, அதனை உங்கள் விரல் நுனியில் தொட்டு புருவங்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தினமும் செய்துவர, புருவ முடி உதிர்ந்த இடம் தெரியாமல் அழகாக வளரும்.

வெங்காயத்தை அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை புருவங்களில் தேய்த்து இரண்டு நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தினமும் செய்யலாம். வெங்காயம் ஒருவரை அழ வைக்கும் என்பதால் புருவத்தில் படும் சாறு கண்களில் இறங்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 2 நிமிடத்திற்கு மேல் புருவத்தில் நீங்கள் வைத்திருந்தால் நிர்வாகம் அதற்கு பொறுப்பல்ல.

ஒரு டம்ப்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் சீரகம் போட்டு நன்றாக கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி விடலாம். பின்னர் அது ஆறியதும், துணியில் அந்த நீரை நனைத்து புருவங்களில் துடைத்து எடுங்கள். ஒரு நாளில் 3 முறை இப்படி செய்யலாம்.

வைட்டமின் சி மற்றும் ஈ அடங்கிய உணவை எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகம் தேநீர் மற்றும் காபி குடிப்பதால் இந்த பிரச்சனையை நீங்கள் சந்திக்கலாம். சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஒரு சிலர் புருவத்தை எந்நேரமும் வரைந்தபடி இருப்பார்கள். இது மிகவும் தவறான செயல். எப்போதாவது வெளியில் சென்றால் மட்டுமே இதை செய்ய வேண்டும். புருவத்திற்கு ஆக்சிஜன் தேவைப்பட, நீங்கள் பயன்படுத்தும் ஐ ப்ரோ மற்றும் ஐ ஷேடோவினால் புருவ முடிக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உதிர வாய்ப்பிருக்கிறது.

Tags:    

Similar News