லைஃப்ஸ்டைல்
என்ன கூந்தலுக்கு என்ன நிவாரணம்?

கூந்தல் அழகை பராமரிக்கும் எளிய வழிமுறை

Published On 2019-11-22 03:53 GMT   |   Update On 2019-11-22 03:53 GMT
பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அந்த வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் கூந்தல் எண்ணெய்ப் பசையானது என்றால் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள். கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூ வுடன் சேர்ந்த கண்டிஷனர் தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். வறண்ட கூந்தல் எனில், லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.

சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள். துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய்ப்பசையும் இல்லை. வறட்சியும் இல்லாத சாதாரணக் கூந்தல் என்றால் வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.

வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள்
Tags:    

Similar News