லைஃப்ஸ்டைல்
அடிக்கடி தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

அடிக்கடி தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2019-11-21 05:42 GMT   |   Update On 2019-11-21 05:42 GMT
பெண்கள் அடிக்கடி முடியை அலசுவதை குறிப்பாக தினமும் செய்வதை தவிர்க்க வேண்டும். இது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நாம் அடிக்கடி தலை முடியை அலச வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து உருவாகலாம். இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். சில நேரங்களில் இது வானிலை மாற்றத்தாலும், முடி மிகவும் பிசுபிசுப்பாக எண்ணெய் பசையுடன் காணப்படுவதாலும் அதை அலசவேண்டியிருக்கலாம்.

சில நேரங்களில் புத்துணர்வாக இருக்கவும் தலைக்கு குளிப்பதுண்டு. காரணம் எதுவானாலும் அடிக்கடி முடியை அலசுவதை குறிப்பாக தினமும் செய்வதை தவிர்க்க வேண்டும். இது பார்க்க எந்த விளைவையும் ஏற்படுத்தாத சாதாரண செயல் போல தோன்றினாலும், அது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் உங்கள் முடி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. இங்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.

1. அதிகம் முடியை அலசுவதால். அது உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2. அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம்.

3. எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள்.

4. முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வகுக்கும். மேலும், பொடுகின் உதிர்ச்சியால் முக பரு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும்.

5. அதிகம் தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை, அரிப்பை ஏற்படுத்தும். மேலும் நாம் உபயோகிக்கும் ஷாம்பூவில் உள்ள இரசாயனங்கள் உங்களது தலையின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக அளவிலான முடிஉதிர்விற்கு வழிவகுக்கும்.

6. அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.
Tags:    

Similar News