லைஃப்ஸ்டைல்
கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

Published On 2019-11-20 05:41 GMT   |   Update On 2019-11-20 05:41 GMT
கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகப்படுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பண்டைய காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிகைக்காய் தேய்த்து குளித்தார்கள். நாம் இப்பொது ஷாம்பூ உபயோகிறோம். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும், கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏன் போட வேண்டும்? எப்படி போட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகப்படுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உங்கள் ஸ்கால்ப்பில் உயிரோட்டம் இருப்பதால், அங்கே கண்டிஷனர் தேவையில்லை. இயற்கை எண்ணெய் சுரப்பதால் வேர்கால்களை, நமது சருமம் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அங்கே கண்டிஷனர் போடும்போது கூந்தல் பலமிழந்து, உதிர துவங்குகிறது.

மிகக் குறைந்த அளவே கண்டிஷனர் போதுமானது. ஆனால் அதிகமாக உபயோகபடுத்தும்போது, அதிலிருக்கும் அதிகப்படியான இரசாயனங்களால் உங்கள் முடியை, நீங்கள் இழக்க வேண்டியது வரும்.

உங்களுக்கு கூந்தல் நல்ல நிலையில் இருந்தாலும், ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஷாம்பு உங்கள் கூந்தலில் அதிக வறட்சியை ஏற்படுத்தி பலமிழக்கச் செய்யும். ஆகவே ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.

உங்கள் கூந்தலுக்கு கட்டாயம் ஆழ்ந்த கண்டிஷனர் தரப்பட வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி, முடி உடைதல் ஆகியவற்றை தவிர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை ஆகியவை கலந்து செய்த கண்டிஷனர், உங்கள் கூந்தலுக்கு வலுவூட்டும்.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கலந்து கடைகளில் கிடைக்கும் ஷாம்புக்கள் உங்கள் கூந்தலுக்கு பலம் தராது. ஏனென்றால் கூந்தலின் நுனிக்கு கண்டிஷனர் அதிகம் தேவை. எனவே இது போன்ற ஷாம்புக்களில் இருக்கும் கண்டிஷனர் பயன் தராது.

கண்டிஷனர் பயன்படுத்தி அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. அதிகபட்சம் 2 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. இது அதிக நேரம் இருந்தால் முடி உதிரத்தொடங்கும்.

நாம் அனைவரும் ஷாம்பு பயன்படுத்தி பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் கண்டிஷனர் பயன்படுத்தி சில நிமிடங்களில் தலையை அலசி, அதன்பின் ஷாம்புவை போடவேண்டும்.. அதாவது கண்டிஷனரை கழுவத்தான் ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News