லைஃப்ஸ்டைல்
உதட்டினை கருமையின்றி வைத்திருப்பது எப்படி?

உதட்டினை கருமையின்றி வைத்திருப்பது எப்படி?

Published On 2019-11-19 06:35 GMT   |   Update On 2019-11-19 06:35 GMT
உதடுகளை கருமையின்றி, சுருக்கம் இன்றி வைத்துக்கொள்ள பெண்கள் முயல வேண்டும். அவ்வகையில், உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்; அழகு, அலங்காரம் போன்ற விஷயங்களில் பெண்கள் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. அப்படி அதீத முயற்சிகள் செய்து அழகான தோற்றத்தை பெற முயற்சி செய்கையில், பெண்கள் மறக்கும் முக்கிய விஷயம், உதடுகள். உதடுகளை கருமையின்றி, சுருக்கம் இன்றி வைத்துக்கொள்ள பெண்கள் முயல வேண்டும்; ஏனெனில் உங்கள் முகத்தின் அழகினை நிர்ணயிப்பதில் உதடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வகையில், உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

* எலுமிச்சை சாறினில், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து உதட்டினில் தடவவும்; பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்; தினமும் இவ்வாறு செய்வது உதட்டின் கருமையை நீக்க உதவும்..!

* யோகார்டிலுள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி வாய்ந்தது; தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவலாம்; யோகார்ட் இல்லையெனில், தயிர் உபயோகிக்கலாம்.

* தக்காளி துண்டை எடுத்து உதட்டை சுற்றிலும் உள்ள கருமை மீது தடவி வந்தால், அது கருமையை நீக்க உதவும்; மேலும் இது உதட்டிற்கு ஈரப்பதம் அளிக்கும்..!

* உருளைத்துண்டு மற்றும் வெள்ளரி சாறெடுத்து உதட்டின் மீது தினசரி தடவவும்; இது உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து, கரிய உதட்டினை சிவப்பாக்கும்..!
வெண்ணெய்

* உதட்டின் ஈரப்பதம் குறைந்தால், கருமை ஏற்படுகிறது; எனவே, அதன் கருமையை போக்க தினமும் வெண்ணெய் தடவவும்..! அதுபோல், ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெயும் உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி, கருமையை நீக்கும்..!

* ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையைப் போக்க சிறந்தது; இந்நீரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டைச் சுற்றிலும், தினமும் இரவு படுக்கச் செல்லுமுன் தடவவும், இது உதட்டின் கருமையை நீக்கி, உதட்டினை சிவப்பாக்கும்..!

Tags:    

Similar News