வாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.
கெமிக்கல் நிறைந்த கண்டிஷ்னர்களை வாங்குவதை விட வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 3
தேன் - 2 ஸ்பூன்
தேங்காய் பால் - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
செய்முறை :
வாழைப்பழத்தை மைய மசித்துக் கொள்ளுங்கள். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் கெட்டியான பதத்தில் வரும். அதுவே வாழைப்பழக் கண்டிஷ்னர்.
பயன்படுத்தும் முறை : தலையை ஷாம்பூ கொண்டு குளித்தபின், தயரித்து வைத்துள்ள கண்டிஷ்னரை அப்ளை செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நன்கு தேய்த்து தலையை அலசுங்கள்.
இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் கூந்தல் உங்கள் சொல் பேச்சை கேட்கும்.