லைஃப்ஸ்டைல்
சரும வறட்சியால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

சரும வறட்சியால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

Published On 2019-10-01 05:37 GMT   |   Update On 2019-10-01 05:37 GMT
குளிர்காலத்தில் சிலருக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் பல உள்ளன.
குளிர்காலத்தில் சிலருக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள், அதிகமாக இப்பிரச்சனையால் கஷ்டப்படுவதுண்டு. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் பல உள்ளன. தற்போது அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* தினமும் இரவில் படுக்கும் போது, சருமத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி வர, சரும வறட்சி தடுக்கப்பட்டு, அரிப்புக்களும் நீங்கும்.

* வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சருமத்தில் தடவி வந்தாலும், வறட்சியினால் ஏற்படும் சரும அரிப்புக்களை முழுமையாகத் தடுக்கலாம்.

* இரவில் படுக்கும் முன், கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி ஊற வைத்து வந்தால், சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

* உதட்டைச் சுற்றி வறட்சி அதிகரித்தால், அப்பகுதியில் லிப் பாமை உபயோகப்படுத்துங்கள். அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் லிப் பாமைப் பயன்படுத்தினால், வறட்சி தடுக்கப்படும்.

* இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், வறட்சி நீங்கி, சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், இரவில் படுக்கும் முன் கொக்கோ வெண்ணெயை சருமத்தில் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

Tags:    

Similar News