லைஃப்ஸ்டைல்
புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்

புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும்

Published On 2019-08-26 03:56 GMT   |   Update On 2019-08-26 03:56 GMT
பெண்கள் புடவை அணிந்தால் தனி அழகு தான். பெண்கள் புடவையை அழகு கெடாமல் பராமரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலும், தழையத் தழைய புடவை(saree) கட்டிக் கொண்டு, கூந்தலில் மல்லிகைசரம் சூடி ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும்.ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் பந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, கரையாகும். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை(saree) ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். அதே போல் நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தான் மாட்ட வேண்டும். நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை(saree) சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசிகாய வைக்கலாம்.

சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்ட பகுதியில் துடைத்தால் கரை மறையும். புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்துக் கொள்ளலாம். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.
Tags:    

Similar News