லைஃப்ஸ்டைல்
போஹா பிங்கர்ஸ்

சூப்பரான ஸ்நாக்ஸ் போஹா பிங்கர்ஸ்

Published On 2021-05-15 09:35 GMT   |   Update On 2021-05-15 09:35 GMT
அவலை கொண்டு வெறும் உப்புமா மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது, குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்கள் விரும்பும் வகையில் பல்வேறு உணவு வகைளை அவல் மூலம் தயார் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்

அவல் - 1 கப்
கடலை மாவு - அரை கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் -
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பெருங்காயம் - சிறிதளவு
ஓமம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

அவலை நன்றாக கழவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

தக்காளி, பூண்டு, ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.

ஊறவைத்த அவலுடன் அரைத்த விழுது, வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். தண்ணீர் விடாமல் மாவை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை நீள வாக்கில் விரல் போன்று உருட்டி கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிங்கர்ஸ்சை கவனமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

அதை சாஸ் உடன் பரிமாறவும்.
Tags:    

Similar News