லைஃப்ஸ்டைல்
ரசப்பொடி

கடையில் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் ரசப்பொடி

Published On 2021-04-22 09:30 GMT   |   Update On 2021-04-22 09:30 GMT
கடைகளில் கிடைக்கும் ரசப்பொடியை வாங்கி உபயோகிக்காமல் வீட்டிலேயே எளிய முறையில் மண மணக்கும் ரசப்பொடியை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மிளகாய் வற்றல் - 200 கிராம்
தனியா - 500 கிராம்
மிளகு - 200 கிராம்
சீரகம் -200 கிராம்
துவரம் பருப்பு -250 கிராம்
விரளி மஞ்சள் -100கிராம்
காய்ந்த  கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:


எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.

மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அரைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.

வீட்டிலேயே  குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.

மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.

இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

ரசம் வைக்கும் போது 1 லிட்டருக்கு 1 ஸ்பூன் ரசப் பொடி போட வேண்டும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News