சமையல்
காளான் - தேங்காய்ப்பால் சூப்

இரும்பு சத்து நிறைந்த காளான் - தேங்காய்ப்பால் சூப்

Update: 2022-02-26 04:09 GMT
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.
தேவையான பொருட்கள் :

பட்டன் காளான்  10
தேங்காய்பால் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு  தேவையான அளவு

செய்முறை:

காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி.
Tags:    

Similar News