லைஃப்ஸ்டைல்
பொரி வெஜிடபிள் சாலட்

பொரி வெஜிடபிள் சாலட்

Published On 2021-11-06 05:30 GMT   |   Update On 2021-11-06 05:30 GMT
காலையில் அல்லது மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த பொரி வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்

பொரி - 1 கப்
வெங்காயம் - 2
கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
கேரட் - 2
வேர்க்கடலை - கால் கப்
ப.மிளகாய் - 2
பீட்ரூட் - 2
கொத்தமல்லி தழை - 1 கையளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

வேர்கடலையை வேக வைத்து  கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வேர்க்கடலை, கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும்.

பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு கலந்தால் சுவையான பொரி வெஜிடபிள் சாலட் தயார்.

Tags:    

Similar News