பொது மருத்துவம்

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

Published On 2022-10-04 01:30 GMT   |   Update On 2022-10-04 01:30 GMT
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
  • வாய்ப்புண்ணை நீக்கி துர்நாற்றத்தை நீக்கும்.

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகவே உள்ளன. இதில் வாழைப்பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது ஆகும். வாழைப்பூவை வாரத்துக்கு 2 முறை சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி விடும்.

இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரைப்பொருளை கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. செரிமான தன்மையை அதிகரிக்கும். வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை உண்டு. மூலநோய்களை குணப்படுத்தும்.

மலச்சிக்கலை போக்கும். சீதபேதியை கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணை நீக்கி துர்நாற்றத்தை நீக்கும்.

Tags:    

Similar News