பொது மருத்துவம்
அசைவ உணவுப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அசைவ உணவுப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-05-18 08:36 GMT   |   Update On 2022-05-18 08:36 GMT
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தகவல்படி, முன்பைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் நமது நாட்டில் அசைவம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆறு வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு தான். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பலர் அசைவம் சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தகவல்படி, முன்பைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் நமது நாட்டில் அசைவம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

அதே வேளையில், 15 வயது முதல் 49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு பங்கினர் அசைவத்தை சாப்பிட்டதே இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜூன் 17, 2019 முதல் ஏப்ரல் 30, 2021க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன், சிக்கன், இறைச்சி ஆகியவை அசைவ உணவுகளாக ஆய்வுப் பட்டியலில் இருந்தன.

2019 - 2021 வரையிலான ஆய்வில், 16.6 சதவீதத்தினர் அசைவம் சாப்பிட மாட்டோம் என்று அறிவித்தனர். 2015 - 2016 வரை எடுக்கப்பட்ட ஆய்வில், இந்த எண்ணிக்கை  21.6 சதவீதம் பேராக இருந்தது.

2019-2021 காலகட்டத்தில், 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 29.4 சதவீதம் பேர் அசைவம் உட்கொண்டதில்லை என்று தெரியவந்துள்ளது. 2015-2016 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 29.9 சதவீதமாக இருந்தது. இதில் பெரியளவிலான மாற்றம் ஏற்படவில்லை.

ஆய்வில் வெளியிடப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

* எப்போதாவது அல்லது வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உண்பவர்கள் ஆண்கள் மத்தியில் 48.9 சதவீதத்திலிருந்து 57.3 சதவீதமாக கடுமையாக உயர்ந்துள்ளனர்.

* எப்போதாவது அல்லது வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை சிக்கிம் மாநிலத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், திரிபுராவில் வெகுவாக குறைந்துள்ளது.

* அதிக அசைவ உணவு உண்பவர்கள் லட்சத்தீவில் (98.4 சதவீதம்) மற்றும் குறைவாக ராஜஸ்தானில் (14.1 சதவீதம்) உள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் அசைவ உணவு உண்பவர்கள் அதிகம். இந்த பட்டியலில் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.

* 15-49 வயதிற்குட்பட்டவர்களில், வாரத்திற்கு ஒருமுறை அசைவ உணவை அதிகம் உட்கொள்வதில்,  கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் முன்னிலையில் உள்ளனர். அதை தொடர்ந்து இந்து மத ஆண்கள்: 52.5%, பெண்கள்: 40.7% உள்ளனர். முஸ்லிம் ஆண்கள்: 79.5%, பெண்கள்: 70.2% மூன்றாவது இடத்திலும், அதனை தொடர்ந்து, சீக்கிய ஆண்கள்: 19.5%, பெண்கள்: 7.9%;  புத்த மத ஆண்கள்: 74.1%, பெண்கள்: 62.2%; மற்றும் ஜெயின் மத ஆண்கள் 14.9%, பெண்கள்: 4.3% உள்ளனர்.

* 96.2 சதவீத ஆண்களும், 94.2 சதவீத பெண்களும் தினமும் அல்லது வாரந்தோறும் பால் மற்றும் தயிர் சாப்பிடுகிறார்கள்.

இவ்வாறு, 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில், மொத்தம் 83.4 சதவீத ஆண்களும், 70.6 சதவீத பெண்களும், அசைவ உணவுகளை தினமும் அல்லது வாரந்தோறும் அல்லது எப்போதாவது  சாப்பிட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News