பொது மருத்துவம்
தர்பூசணி

தர்பூசணி தரும் நோய் எதிர்ப்பு சக்தி

Update: 2022-04-25 06:48 GMT
அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து அவற்றை வெளியேற்றுகிறது.
தர்பூசணி புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

தர்பூசணி 90 சதவீதம் தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு தாகம் தீர்க்கும் சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. தர்பூசணியில் ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன.

தர்பூசணியில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணி நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்து ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வருகிறது. ஜனவரி முதல் கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் வரை சந்தையில் விற்கப்படுகிறது. தர்பூசணியின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். தர்பூசணியின் எடையானது குறைந்தது 8 முதல் 12 கிலோ வரை இருக்கும்.

தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பி.பி. உள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம். பி.பி. படிப்படியாக குறையும்.

ரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. மற்ற பழங்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியில் சிட்ருலின் எனும் புரதச்சத்து இருப்பதால், இது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது இருதயக் கோளாறுகளையும் சரி செய்கிறது.

தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துகள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.

தர்பூசணியில் வைட்டமின்-சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

இந்தப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவும்.

அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து அவற்றை வெளியேற்றுகிறது.

தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மற்ற பழங்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியை கோடை காலத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தர்பூசணியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

தர்பூசணியில் அதிக அளவு நீர் தான் இருக்கிறது கலோரியானது குறைவாக தான் இருக்கிறது. எனவே இது எடையை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும்.

ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது. எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

தர்பூசணி பாலியல் உணர்வை தூண்டும் வல்லமை கொண்டது.

அதிக தர்பூசணியை சாப்பிடுவதால் வயிற்றில் அசவுகரியம், வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளியாக இருந்தால், அதிக தர்பூசணி சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடும்.

மது குடிக்கும் நபர்கள் அதிகமாக தர்பூசணியை எடுத்து வந்தால் கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நீர் சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்து வர கூடாது. ஏனென்றால் ரத்தத்தின் அளவை அதிகரித்து கால்களில் வீக்கம் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்கள் வரக்கூடும்.

தர்பூசணியில் அதிகப்படியான பொட்டாசியம் இருப்பதால் இது இதய ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் பல இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தர்பூசணியை நாம் சாப்பிட்டு விட்டு தூர போடுகிறோம். இதில் உள்ள தோள்களும், விதைகளும் சிறந்த பலனை தருகிறது.

தர்பூசணி சாப்பிட்ட பின்னர் அதன் தோலை நம் முகத்தில் அல்லது கைகளில் தடவினால் அழுக்குகள் அகன்று தோலை மென்மையாக்கும்.

தர்பூசணி விதை பெண்களை விட ஆண்களுக்கு நிறைய பலனை தருகிறது.

தர்பூசணி விதையில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களை அதிகம் உருவாக்குகிறது.

தர்பூசணி விதைகளை காய வைத்து அதை வறுத்து சற்று தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதோடு பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை இது சரிசெய்ய உதவுகிறது.

தர்பூசணி விதைகளில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.

தர்பூசணியில் நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும் உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.
Tags:    

Similar News