உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.
உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.
கற்கண்டு நீரை பருகிவந்தால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்படும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டுவையும், சிறிது ரோஜா இதழ்களையும் கலந்து பருகலாம். அசிடிட்டி மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் இரவு சாப்பிட்டு முடித்ததும் கற்கண்டு நீரை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.