லைஃப்ஸ்டைல்
மாற்றுத்திறனாளிகளுக்கான புதுமையான முகக்கவசம்

மாற்றுத்திறனாளிகளுக்கான புதுமையான முகக்கவசம்

Published On 2020-04-14 04:30 GMT   |   Update On 2020-04-13 04:16 GMT
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிவதில் சிக்கல் இருக்கிறது. மற்றவர்கள் பேசுவதை அவர்களின் உதட்டு அசைவை வைத்துத்தான் யூகிப்பார்கள். தங்களை போல் கேட்கும், பேசும் தன்மையை இழந்தவர்களுடன் உதட்டு உச்சரிப்பின் மூலமும், சைகை மொழி பேசியும்தான் தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள்.

முகக்கவசம் அணியும்போது வாய்ப்பகுதி முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும் என்பதால் மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. இந்தநிலையில் வாய்பேசாதோர், காதுகேளாதோருக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஆஸ்லே லாரன்ஸ், முகக்கவசம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.

இந்த முகக்கவசம் வாய்ப்பகுதி மட்டும் தெரியும்படி பிளாஸ்டிக் இழைகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காதுகேளாதோர் தொடர்பான படிப்பை படித்துவரும் ஆஸ்லே, உணர்வு ரீதியாக காதுகேளாதோரின் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த முகக்கவசத்தை உருவாக்கி இருக்கிறார். சமூகவலைத்தளத்தில் அந்த முகக்கவசத்தை பகிர்ந்தவர், ‘‘தற்போது புழக்கத்தில் இருக்கும் முகக்கவசங்கள் காது கேளாதவர் களுக்கு பொருத்தமாக இருக்காது.

ஏனெனில் வாய்ப்பகுதி மூடப்பட்டுவிடுவதால் அவர்களால் சைகை மொழியை பயன்படுத்த முடியாது. உதட்டு உச்சரிப்பு மூலமும் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாது. மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும். முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிறைய பேர் தங்களுக்கு சவுகரியமான முகக்கவசத்தை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை பார்த்தபோதுதான் நாம் ஏன் காது கேளாதவர்களுக்கு முகக்கவசம் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இந்த முகக்கவசத்தை அணிவதன் மூலம் மருத்துவர் களையும் எளிதாக அணுக முடியும்’’ என்கிறார்.

21 வயதாகும் ஆஸ்லே தனது தாயாரின் உதவியுடன் இந்த முகக்கவசத்தை வடிவமைத்திருக் கிறார். வாய்பேச முடியாதவர்களுக்கு இலவசமாக வினியோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகவலைத்தளத்தில் ஆதரவும் திரட்டி வருகிறார். தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு முகக்கவசத்தை உருவாக்குவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்த முகக்கவசத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. காது கேட்கும் தன்மை இழந்த ஒருவர் கூறுகையில், ‘‘முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிப்பதற்கு கடினமாக இருக்கிறது. இந்த வகை முகமூடியை அணியும்போது என்னை போன்றவர்களிடம் என்னால் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இது நிச்சயம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார், மற்றொருவர், ‘‘இப்படி யொரு முகக்கவசத்தை பற்றி சிந்தித்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இது அற்புதமான விஷயம். இந்த முகக்கவசத்திற்கு தேவையும், அவசியமும் இருக்கிறது’’ என்கிறார்.
Tags:    

Similar News