லைஃப்ஸ்டைல்
கொசு கடித்தால் என்ன செய்யலாம்...

கொசு கடித்தால் என்ன செய்யலாம்...

Published On 2020-03-31 07:55 GMT   |   Update On 2020-03-31 07:55 GMT
கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும். இதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும். அந்த இடத்தில் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோல் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கொசு கடித்தால் ஏற்படும் சிவப்பு தழும்பை போக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. வாழைப்பழ தோலின் உள்பகுதியில் இருக்கும் இழைகளை தனியாக எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழைத்து கொசு கடித்த இடத்தில் பூச வேண்டும். பின்னர் அதன் மேல் ஐஸ் கியூப்பை வைத்து பருத்தி துணியால் கட்டவேண்டும். கால் மணி நேரம் கழித்து கழற்றி விடலாம்.

கொசுக்கடிக்கு வெள்ளரிக்காயையும் உபயோகப்படுத்தலாம். அதற்கும் சரும அரிப்பை போக்கும் தன்மை உண்டு. வாழைப்பழ தோல் மசியலுடன் சிறிதளவு வெள்ளரிக்காயையும் மசித்து அதனை கொசு கடித்த இடத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பின்பு அதனை துடைக்கக்கூடாது.

வாழைப்பழத்தோலுடன் கிளிசரினையும் பயன்படுத்தலாம். வாழைப்பழ தோல் மசியலுடன் சில துளி கிளிசரின் சேர்த்து கொசு கடித்த இடத்தில் பூசி அரை மணி நேரம் வரை உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
Tags:    

Similar News