லைஃப்ஸ்டைல்
செப்பு பாத்திரம்

வைரஸை எதிர்க்கும் செப்பு பாத்திரம்

Published On 2020-03-30 04:16 GMT   |   Update On 2020-03-30 04:16 GMT
பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிர்ப்பு பொருளாக செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கதவுகளில் வைரஸ்களும், பாக்டீரியாக்களும் இரண்டு மணி நேரம் வரையே உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்பு பாத்திரங்களுக்கும் அது பொருந்தும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் மூன்று நாட்கள் வரை வைரஸ்கள் உயிர்வாழ்வது தெரியவந்துள்ளது. அதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிர்ப்பு பொருளாக செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. பண்டைய காலத்தில் செப்பு பாத்திரங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான காரணம் அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்துவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 229ஈ எனும் ஒருவகை கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுவாச குழாயில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் இந்த வகை கொரோனா வைரஸ் நுரையீரல் செல்களை பாதிக்கும் தன்மையும் கொண்டது. இந்த நோயை பரப்பும் கொரோனா வைரஸ் பீங்கான், டெப்ளான், கண்ணாடி, சிலிக்கான், ரப்பர் போன்ற பொருட்களில் நீண்ட நாட்கள் உயிர்வாழும் தன்மை கொண்டிருந்தது. ஆனால் செப்பு பாத்திரங்களில் இருந்த கொரோனா வைரஸ் விரைவாகவே செயலிழந்துவிட்டது. பாக்டீரியா, ஈஸ்ட், வைரஸ் போன்றவை செப்பு உலோக பாத்திரங்களில் படிந்திருந்தால் விரைவாகவே செயலிழந்து விடும் என்பது புதிய ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செப்பு உலோகத்திற்கு கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் அதனை பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்திற்கும் நலம் சேர்க்கும். முதிய தோற்றம் ஏற்படுவதை தடுக்கவும் உதவும். ஸ்டீல் பாத்திரங்களைவிட செப்பு பாத்திரங்கள் 20 மடங்கு நமக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை கொண்டது. சீரான வெப்பநிலையை கடத்தி உணவை சமைக்க வைக்கவும் உதவும். தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்களால் செப்பு பாத்திரங்களில் உயிர்வாழ முடியாது என்பதால் உணவில் இருந்து கிருமிகள் பரவுவதையும் தடுக்கிறது. செப்பு பாத்திரங்களை சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News