லைஃப்ஸ்டைல்
பித்தக்கற்கள்

பித்தக்கற்கள் உண்டாக காரணங்களும், சிகிச்சை முறையும்

Published On 2020-03-26 08:42 GMT   |   Update On 2020-03-26 08:42 GMT
பித்தப்பை கற்களை உடையவர்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி வலியில் வதங்கி வாட வேண்டிய தேவை இல்லை. நவீன 3டி லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பித்த நீர் மஞ்சள் நிறமானது. அதற்கு காரணம் அதில் உள்ள பிலுருபின் என்ற நிறமியாகும். இந்த பிலுரு பின் இரத்தத்தில் அதிகமாக சுரப்பதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் ஏற்படுகிறது. பித்தப்பை சாப்பிடுவதற்கு முன் பெரிதாக இருக்கும்.

சாப்பிட்ட பின் சிறிதாகி விடும். ஏனெனில் அதில் உள்ள பித்த நீர் எல்லாம் உணவு செரிப்பதற்காக குடலுக்கு வந்து விடும். பித்தப்பையில் கல் இருந்தால் இவ் வாறு செயல்படுவது இயலாது.

பித்தக்கற்கள் உண்டாக காரணங்கள்

1 வார்டு மாயினிஹான் கூற்றிற்கு ஏற்ற வண்ணம் பித்தக்குழாயிலும் பித்தப் பையிலும் ஏற்படும் நோய் கிருமிகளின் தாக்குதல்களாலும் வேதியியல் மாற்றங்களாலும் பித்தக் குழாய்களில் கற்கள் உண்டாகி பித்த நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றது.

பித்தப்பை கற்களின் அறிகுறிகள்

1. வயிற்றின் வலப்புறமாக வலி ஏற்படும். இவ்வலி வலது தோளுக்கோ அல்லது வலது விலாவின் பின்புறமாகவோ பரவலாம்.

2. கொழுப்பு நிறைந்த ஆகாஇஇரத்தின் போது இந்த வலி அதிகப்படும்.

3. ஆகாரம் நன்கு செரிக்கா மல் உப்பிடும் என்னும் மந்தநிலை ஏற்படுதல்.

4. வாந்தி காய்ச்சல் முதலிய நோய்களும் உண்டாகும்.

சிகிச்சையின் நன்மைகள்

1. மிக நுண்ணிய துளைகளின் மூலம் சிகிச்சை செய்யப்படுவ தால் தழும்பு களும் தைலும் இல்லை.

2. இரத்த இழப்பு இல்லை.

3. ஒரு சிறிய துளையின் வழியே வயிற்றின் உட்பகுதி யில் வேறு ஏதேனும் நோய் உள்ளதா என அறிய முடியும். மேலும் அதற்கு தேவையான நிவர்த்தியும் செய்யலாம்.

ஆகவே பித்தப்பை கற்களை உடையவர்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி வலியில் வதங்கி வாட வேண்டிய தேவை இல்லை. நவீன 3டி லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

சாந்தி நர்சிங் ஹோம் சுரண்டை.Dr. G.அழகேசன்M.S.D.L.S.
Tags:    

Similar News