லைஃப்ஸ்டைல்
ஊறுகாய்

தினமும் ஊறுகாய் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா?

Published On 2020-03-17 07:47 GMT   |   Update On 2020-03-17 07:47 GMT
நாம் உண்ணும் உணவில் பெரும்பாலானோர் ஊறுகாய் சேர்த்து தான் சாப்பிடுவது வழக்கம். தினமும் ஊறுகாய் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவில் பெரும்பாலானோர் ஊறுகாய் சேர்த்து தான் சாப்பிடுவது வழக்கம். இதனால் உடலில் பிரச்சனைகளை உண்டாக்குமாம்.
விதவிதமான வகையிலும் பல்வேறு காய்கறிகளில் செய்யும் ஊறுகாய்களும் இருக்கிறது. இதில் அதிகமாக மிளகாய் பொடிகள் சேர்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாகவும் காரத்தன்மையுள்ள ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகிறது.

ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது.

ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள். இதனால் ஊறுகாயை தவிர்ப்பது உடலுக்கு நல்லதாம். அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.

ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News