லைஃப்ஸ்டைல்
தானம் செய்வோம்.. பிறர் நலத்துடன், நாமும் வாழ்வோம்..

தானம் செய்வோம்.. பிறர் நலத்துடன், நாமும் வாழ்வோம்..

Published On 2020-02-24 07:45 GMT   |   Update On 2020-02-24 07:45 GMT
ஒரு மனிதன் தன் வாழ்நாளைக் கடந்தும் சக மனிதரை வாழ்விக்க தன் முழுமையான வாழ்வுக்கும், நிறைவான நலனுக்கும் கேடு விளைவிக்காத முறையில் வழங்கப்படுவதே உறுப்பு தானமாகும்.
தேசிய உடல் உறுப்பு கொடையாளர் தினம் பிப்ரவரி 14-ந்தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று உடல் உறுப்பு தானம்தான் மிகவும் உயரியது என்ற நிலையை எட்டியிருக்கிறது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளைக் கடந்தும் சக மனிதரை வாழ்விக்க தன் முழுமையான வாழ்வுக்கும், நிறைவான நலனுக்கும் கேடு விளைவிக்காத முறையில் வழங்கப்படுவதே உறுப்பு தானமாகும். போதிய மருத்துவ ஆலோசனைகளுடன், வெளிப்படையாக, மனப்பூர்வமான ஒப்புதலுடன் தானம் வழங்கலாம். உறுப்பு தானத்தை விரும்புவர்கள் எவ்வித வியாபார நோக்கமுமின்றி தன் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும். நாம் இறந்த பின் தானமாக தரக்கூடிய உடல் உறுப்புகள் நமது கல்லீரல், கண், நுரையீரல், இதயம், கணையம், எலும்பு, தோல் போன்றவையே.

நம் உடல் இறந்த பின் இந்த உறுப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள், அரித்து வீணாகப்போகிறது. இதற்கு மாறாக நாம் இறந்த பின்னரும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் விதமாக வழங்கப்படுவதே உறுப்புதானம். இதன் மூலம் நாம் பலரின் உடம்பில் இருந்தபடி இந்த உலகத்தில் வாழ்கிறோம். நம் உடல் பலருடைய வாழ்வுக்கு பயனுள்ளதாக அமையும் என்கிற எண்ணத்தில் ஒவ்வொருவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். ஆகவே இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது.

நம் நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புகளை நாம் தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொள்வதுதான். உடல் உறுப்பு தானம் செய்ய எங்கு பதிவு செய்ய வேண்டும். எதையெல்லாம் தானம் செய்யலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆகவே இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களாகிய நாமும் பொது மக் களிடம் கொண்டு சேர்ப்போம்.
Tags:    

Similar News