லைஃப்ஸ்டைல்
குப்பைமேனி

தோல் பிரச்சினைக்கு குப்பைமேனி பயன்படுத்துவது எப்படி?

Published On 2020-02-12 07:43 GMT   |   Update On 2020-02-12 07:43 GMT
அற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ பண்புகளையும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
குப்பைமேனி செடி அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குண நலன்களையும் கொண்டுள்ளது. தேவையற்ற முடி அகற்றுதல் முதல் சளி பிரச்சினை, இருமல் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, இது ஏராளமான பயன்களை கொண்டுள்ளது. இந்த அற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ பண்புகளையும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி  அறிந்து கொள்ளலாம்.

தோல் நோய்களுக்கு குணமளிக்கும் குப்பைமேனி எண்ணெய்:

* முதலில் குப்பைமேனி எண்ணெயை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
* குப்பைமேனி எண்ணெயை தயாரிக்க, ஃப்ரெஷான குப்பைமேனி இலைகளை எடுத்து, மிக்சியில் மிக மென்மையாக பேஸ்ட் ஆக அரைத்துக்கொள்ளவும்.
* அதை நன்றாக அரைத்து முடிந்ததும், ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி அதிலிருந்து சாற்றை வடிகட்டவும்.
* இப்போது ஒரு பாத்திரத்தில் சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது ஃப்ரெஷ் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள்.
* அனைத்தையும் கலந்து ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கத் தொடங்குங்கள்.
* நன்கு காய்ந்து சத்தம் அடங்கியதும் ஒரு நல்ல நறுமணம் வந்ததும், அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் குப்பை எண்ணெய் தயார்!!

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை குளிர்விக்கவும். இந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, அனைத்து சிறு தோல் நோய்த்தொற்றுகள், காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்களுக்கு குணமாகும் வரை தொடர்ந்து பயன்படுத்துங்கள். விரைவில் உங்கள் தோல் பிரச்சினைகள் எல்லாம் பறந்து போகும். 
Tags:    

Similar News