லைஃப்ஸ்டைல்
ஆஸ்துமாவை குணமாக்கும் உணவு முறைகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் உணவு முறைகள்

Published On 2020-02-09 04:30 GMT   |   Update On 2020-02-06 03:54 GMT
ஆஸ்துமா உள்ளவர்கள் முழுவயிறு சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். எனவே அஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சுத் திணறல் வரும்.
ஆஸ்துமா என்பது சுவாச அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும். காற்று செல்லும் வழிகள் சுருங்குவதால் இது ஏற்படுகிறது. நுரையீரல், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. ஆண்களுக்கு அதிகமாக வரக்காரணம் அதிக மன ழுத்தம், கவலை. இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.

ஆஸ்துமா குணமாக உணவு முறைகள்

அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால்வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் முழுவயிறு சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். எனவே அஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சுத் திணறல் வரும்.

மிகவும் ஆறிய குளிர்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள். சூடான உணவைச் சாப்பிடுங்கள்.

இரவு சாப்பாடு மிகக்குறைவாக 7.00 மணிக்குள் சாப்பிடவும். அதுவும் சூரியன் மறையும்முன் 6.00 மணிக்குள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இரவில் தயிர், பால், குளிர்ந்த பானங்கள் அறவே தவிர்க்கவும். இரவில் கீரை தவிர்க்கவும்.

பூண்டு போட்டு அரிசிக் கஞ்சி சாப்பிடவும். பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டு சாப்பிடவும்.

எளிய சித்த மருத்துவம்


* அருகம்புல் சாறு அதிகாலையில் பருகவும்.
* துளசி இலை 10 இலைகள் மென்று சாப்பிடவும்.
* தூதுவாளைச் செடி இலைகளை ரசம் வைத்து உணவுடன் உண்ணவும்.
* வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் குடிக்கவும்.
* மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கவும்.
* முசுமுசுக்கை இலையை வதக்கி சாப்பிடவும்.
* கற்பூரவல்லி இலை மூன்று, மிளகு மூன்று, வெற்றிலை இரண்டும் சேர்ந்து நீரில் கொதிக்கவைத்து வற்றியவுடன் அந்த நீரைப் பருகவும்.
* ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சளி வெளியேறும்.
* மஞ்சள் தூள் ஒரு கரண்டி, தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிடவும்.
* இருமல் இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
* அதிகாலையில் இருமல் இருந்தால் கடுகை அரைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
* ஆடாதோடா இலையை கீரைபோல் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடவும்.

முக்கிய குறிப்பு

மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஒரு மாதம் ஏதாவது மூன்று மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்;. அடுத்த மாதம் மூன்று வகைகள் எடுத்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News